பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்றைய தினம் பிக்பாஸ் வீட்டில் ரோபோ டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அதில் பாதிப்பேர் ரோபோவாகவும் மீதி பேர் மனிதர்களாகவும் இருக்கின்றனர். மனிதர்கள் ரோபோக்களை சிரிக்க அல்லது அழ வைக்க வேண்டும் என்பதுதான் டாஸ்க். இதில் போட்டி எல்லை மீறி போக "என் அப்பாவின் இறப்பு விளையாட்டு அல்ல".... கூச்சலிட்டு கதறி அழுத அர்ச்சனா மற்ற போட்டியாளர்களிடம் கோபமாக சண்டை போடுகிறார். மேலும் அவர் கதறி அழுவதையும் பார்க்க முடிகிறது.
நேற்றைய தினம் அர்ச்சனாவுக்கும்நிஷாவுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. முதல்முறையாக அர்ச்சனா நிஷாவைப் பார்த்து கோபமாக கத்தியதையும் பார்க்க முடிந்தது. அவரது தந்தையை பற்றி நிஷா கேட்ட கேள்விகள் பொருத்தமற்று இருந்தது என்று ரசிகர்களும் கூட கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த நேரத்தில் இருவருக்கும் இடையே நடந்த சண்டையில் ஷிவானி அமைதியாக நின்று கொண்டிருந்த போது, நிஷாவின் கை வேகமாக அவரது கன்னத்தில் அடிப்பதையும் அதற்கு ஷிவானி கொடுக்கும் ரியாக்ஷனும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
— Siva.k (@sivakubendiran) December 9, 2020