பிக்பாஸ் வீட்டில் அதிகம் பேசவில்லை என காரணம் கூறி ஆளாளுக்கு கார்னர் செய்து நாமினேஷனுக்கு அனுப்பி வைத்தாலும் ஷிவானியின் ஆர்மி அவரை கைவிடவில்லை. நேற்று முன்தினமே அவர் வாக்குகள் அடிப்படையில் காப்பாற்றப்பட்டதாக கமல் தெரிவித்து விட்டார். முன்னதாக எவிக்ஷன் பிரீ பாஸ்க்காக பெரிதாக எந்தவொரு விளக்கமும் கொடுக்காமல் சட்டென அவர் எழுந்து சென்றது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒரே வாரத்தில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
நேற்று நடைபெற்ற மாஸ்க் டாஸ்க்கில் ஷிவானி எந்தவொரு மாஸ்க்கையும் பெறவில்லை. அதே நேரம் அவருக்கு அன்பை வெளிப்படுத்தும் விதமாக மூன்று பேட்ஜ்கள் கிடைத்தன. அதோடு ரேகா தன்னுடைய காயினையும் அவரிடம் கொடுத்து சென்றுள்ளார். இதனால் தற்போது ஷிவானி மீதான நேர்மறை எண்ணம் அதிகரித்து உள்ளது. மேலும் ரேகா வெளியில் சென்றபோது அவர் அழுதது ரசிகர்கள் மனதை வெகுவாக நெகிழச்செய்து விட்டது.
First week
Highest heartbreaks
&
Second week
No mask
&
A Coined earned from housemate
Good going girl #Shivani🐰
And
Growing strong friendship and care between #RamyaPandian & #Shivani was amazing... 🌷
— michael arun (@arunjeba) October 18, 2020
இந்த பொண்ணு இவ்ளோ நல்ல பொண்ணா இருக்கு. எல்லா டாஸ்க்கையும் நல்லா பண்ணுது என அவருக்கு ஆதரவு குரல்கள் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன. குறிப்பாக வரும் வாரங்களில் ஷிவானி முழு ஈடுபாட்டுடன் டாஸ்க்குகளில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியே சென்றால் பைனல் வரை ஷிவானி தாக்குபிடித்து பிறருக்கு கடுமையான போட்டியாளராக திகழலாம். தற்போதைய நிலவரப்படி சுரேஷ், ஷிவானி, ரம்யா மூவரும் பைனல் வரை செல்லக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.