சமீபத்தில் ஆபிஸ் ரூமுக்கு அழைத்து எல்லாரையும் பிக்பாஸ் வைத்து செய்து அனுப்பினார். உள்ளே சென்று வந்தவர்கள் கொரோனா டெஸ்ட் எடுத்தாங்க என உண்மையை மென்று விழுங்கினர். அந்தளவுக்கு பிக்பாஸ் கதற வைத்து அனுப்பினார். அந்த டாஸ்க் நன்றாக ஒர்க்கவுட் ஆனதால் அதையே கண்டினியூ செய்யலாம் என நினைத்தார் போல. சப்பாத்தி தேய்த்து கொண்டிருந்த ஷிவானியை திடீரென அழைத்து அப்புறம் வந்து சப்பாத்தி தேய்க்கலாம் ஆபிஸ் ரூம் வாங்க என அழைத்தார்.
அங்கு இந்த பிக்பாஸ் சீசன் குறித்து சொல்லுங்க என அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே ஷிவானி கதறியழ ஆரம்பித்து விட்டார். அழுகைக்கு இடையில் நான் நானாகத்தான் இருக்கிறேன். பெரிதாக எந்த விஷயமும் செய்யவில்லை. எவிக்ஷன் பட்டியலில் கடைசி இருவராக நின்று காப்பாற்றப்பட்ட போது அந்த பிரஷரை என்னால் தாங்க முடியவில்லை. அம்மாவை ரொம்ப மிஸ் பண்றேன் என கூறினார்.
Adei bb🤣🤣🤣#Shivani neenga alugum bothu alaga than irukeenga🤣.so nice of bb to make her laugh🤗#BiggBossTamil4#BiggBossTamil
— CrazyLadki_Editz🦋 (@CrazyLadkiEditz) December 14, 2020
இதைக்கேட்ட பிக்பாஸ் நீங்க நீங்களாகத்தான் இருக்கீங்க அதையே தொடருங்க என்றார். எனினும் ஷிவானியின் அழுகை குறையவில்லை. இதையடுத்து அழும்போதும் நீங்க அழகா இருக்கீங்க என பிக்பாஸ் சொல்ல, அப்போது தான் அவரின் அழுகை முடிவுக்கு வந்தது. வீட்டில் அம்மா, டயமண்ட்(நாய்க்குட்டி) எல்லாரும் நல்லா இருக்காங்க என பிக்பாஸ் தெரிவிக்க, என்னைய ஷிவுன்னு கூப்பிடுங்க பிக்பாஸ் என கோரிக்கை வைத்தார்.
#BiggBossTamil4 #BiggBoss4Tamil #BiggBossSeason4 #BBTamilSeason4 @vijaytelevision @ikamalhaasan #BiggBossTamil @sripriya
Even BiggBoss failed to get content from Shivaani🤣🤣🤣
Finally 👇👇👇 pic.twitter.com/dzmObJfiwS
— Sabi (@SabiNSabee) December 14, 2020
அவரின் கோரிக்கையை நிறைவேற்றிய பிக்பாஸ் தொடர்ந்து ரியோவையும் அழைத்து ஐ லவ் யூ எல்லாம் சொல்லி, அவரின் மகள் பேச ஆரம்பித்து விட்டதை கூறினார். இதைக்கேட்டு ரியோவும் கதறியழுதார். மீதமுள்ளவர்கள் இன்று அழுவார்கள் போல. இதைப்பார்த்த நெட்டிசன்கள் என்ன பிக்பாஸ் திடீர்னு கூப்புட்டு நலம் விசாரிக்குறீங்க? என்ன அவ்வளவு கரிசனம்? என கிண்டலடித்து வருகின்றனர்.