www.garudavega.com

ஷிவானியை திட்டித் தீர்த்த அம்மா... ஷாக்கான ரசிகர்கள்.."வாய மூடு ஓங்கி அறஞ்சிடுவேன்"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று 86வது நாளை கடந்து வெற்றிகரமாக இறுதிப் பயணத்தை போட்டியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் ஒவ்வொரு சீசனிலும் இறுதியாக நடைபெறும் Freeze டாஸ்க்கிற்காக ரசிகர்கள் காத்திருப்பது வழக்கம். அந்த வகையில் இன்று இந்த சீசனுக்கான Freeze டாஸ்க்  துவங்குகிறது. முதல் ஆளாக ஷிவானியின் தாயார் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார்.

shivani mom in biggboss4tamil freeze task ஷிவானியை திட்டி தீர்த்த அம்மா

அவர் ஷிவானியின் மீது கடுமையான கோபத்தில் இருந்தார் என்பது அவர் பேசிய வார்த்தைகளிலேயே தெரிந்தது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் தனது மகளை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்து ஏமாற்றும் அடைந்ததையும் பார்க்க முடிகிறது. ஷிவானியின் தாயார் கூறும்பொழுது "நீ பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து என்ன பண்ண... வாய மூடு உன்னை அறைஞ்சிடுவேன். அவன் சொல்றதுக்கெல்லாம் நீ ஏன் வழிமொழிந்து கிட்டு இருக்கே... நானா இருக்கேன்னு என்ன ம*** சொல்லிட்டு திரியுற... கிறிஸ்துமஸ் பரிசு கொடுக்க உனக்கு பெண்களே இல்லையா... நான் வாங்கி கொடுத்ததை அவனுக்கு ஏன் கொடுக்கிற... இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து என்ன கிழிச்சன்னு சொல்லு... சொந்தக்காரங்க அசிங்க அசிங்கமா பேசுறாங்க... இங்கே வந்து நீ ஆயா வேலை பார்த்துகிட்டு இருக்க" என்பது போன்ற கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினார். ஷிவானி பதில் பேச முடியாமல் கதறி அழுதார். இதில் யார் பக்கம் நியாயம் என்று சொல்வதே மிகவும் கடினமாக இருந்தது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Tags : Shivani

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Shivani mom in biggboss4tamil freeze task ஷிவானியை திட்டி தீர்த்த அம்மா

People looking for online information on Shivani will find this news story useful.