பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்றைய தினம் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அர்ச்சனா பிக்பாஸ் வீட்டின் பாட்டியாகவும், அவர் வைத்திருக்கும் பாத்திரத்தை குடும்பத்தினரில் ஒருவரான சோம், ரம்யா மற்றும் கேப்ரியல்லா திருடுவது போன்ற ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று அந்த பாத்திரம் திருடப்பட்டது. இதனை அடுத்து ஒருவர் மாற்றி ஒருவர் பழி போட்டு கொண்ட போட்டியாளர்களில், பாலா மற்றும் கேப்ரியல்லா இடையே கடுமையான வாக்குவாதம் முற்றுகிறது. இந்நிலையில் கேப்ரியல்லா பாலாஜியை பார்த்து "நேர்மையாக சொல் யார் எடுத்தது என்று கேட்க", அதனை சுச்சியும், ஷிவானியும் "உன் நேர்மையை பற்றி தவறாக சொன்னார்" என்று உசுப்பேத்தி விட்டார்கள். அவருக்கும் கேபிக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்படுகிறது. அது சிறிது நேரத்திலேயே ஷிவானி, கேபி சண்டையாக மாறியது. முன்னெப்போதும் இல்லாத வகையில் வார்த்தைகள் தடுமாறியது.
பின்பு சம்யுக்தா கூறும்போது சுசித்ரா உங்களை ஏற்றி விடுகிறார் என்று கூற, அதனை பாலா மற்றும் ஷிவானி இருவருமே ஒப்புக்கொண்டார்கள். பின்பு ஷிவானி என்னையும் தவறாக தான் நினைக்கிறாயா என்று பாலாவிடம் கோபித்து கொண்டார். அவரை சமாதான படுத்த முடியாமல் பாலாஜி தவித்ததும் குறிப்பிடத்தக்கது.
Shivani has triggered Bala. If she has problem about someone speaking about her honesty.. Shivani should be questioning them directly.. instead she usupethified Bala.. cunning #biggbosstamil #BiggBoss4Tamil
— Sharmilanraja (@SRNR2020) November 11, 2020