விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பகல் நிலவு' சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஷிவானி. இந்த சீரியலுக்கு பிறகு நடிகர் அசீமுடன் சேர்ந்து 'கடைக்குட்டி சிங்கம்' என்ற தொடரில் நடிக்க ஆரம்பித்தார்.
ஆனால் சில நாட்களிலேயே அந்த சீரியல் திடீரென நிறுத்தப்பட்டது. அதன்பிறகு அவர் வேறு ஒரு சேனலுக்கு மாறினார்.
இந்த கொரோனா ஊரடங்கில் மிகவும் பிரபலமடைந்த நபர்களில் அவரும் ஒருவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தனது போட்டோஷூட் படங்களால் தமிழ் ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டவர், மில்லியன் ரசிகர்களை குவித்தார். இந்நிலையில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொண்டதிலிருந்து அமைதியாக இருந்தாலும், தேவையான இடங்களில் தனது கருத்தை நேர்மையாக பதிவு செய்கிறார்.
ஆனாலும் அவர் பாலாவுடன் மட்டுமே அதிக நேரம் செலவிடுவதாக போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்களுமே குறை கூறி வருகின்றனர். 2001-ஆம் ஆண்டு பிறந்த அவருக்கு 19 வயது தான் ஆகிறது. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சிறுவயது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதற்கும் பத்து வருடங்களில் தற்போது இருக்கும் ஷிவானிக்கும் எவ்வளவு வித்தியாசங்கள் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.