விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. வரவர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது. போட்டியாளர்களுக்கும் சரி, கோமாளிகளுக்கும் சரி தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றே சொல்லலாம். போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமைக்க படாதபாடு படும் காட்சிகள் ரசிகர்களை குலுங்கி, குலுங்கி சிரிக்க வைக்கிறது. அதிலும் முக்கியமாக புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை என கடந்த சீசனில் இருந்த கோமாளிகள் இந்த சீசனிலும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஷோவிற்காக ரசிகர்கள் காத்திருந்து பார்க்கும் அளவிற்கு மிகப்பெரிய ரீச் அடைந்துள்ளது.
அதிலும் ஷிவாங்கிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர் சுனிதாவுடன் சேர்ந்து அஸ்வினுக்காக செய்யும் சேட்டைகள் ரசிக்கும்படி இருக்கின்றன. அவரை இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கில் மக்கள் பாலோவ் செய்கின்றனர். இந்நிலையில் தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் தனது பெயரில் போலியான டிவிட்டர் கணக்கை உருவாக்கிய சிலர் “#GoBackModi" என்று பதிவிட்டுள்ளனர். இதைப் பார்த்த ஷிவாங்கி ஷாக் ஆகியுள்ளார். மேலும் தான் டிவிட்டரில் இல்லை என்றும் உடனடியாக அந்த ஐடியை ரிப்போர்ட் செய்யும் படியும் கோரிக்கை வைத்துள்ளார். பிரபலங்கள் இப்படி சைபர் கிரைம் குற்றவாளிகளால் பாதிக்கப்படுவது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.