www.garudavega.com
iTechUS

ரஜினி நடிக்கும் 'ஜெயிலர்'.. கர்நாடக மாநிலத்தின் முக்கிய நகரில் ஷூட்டிங்? தெறி அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.

Shiva Rajkumar Jackie sheroff portions filming in mangalore for Jailer Deets

                   Images are subject to © copyright to their respective owners.

Also Read | தளபதி 67 படத்தில் பிரியா ஆனந்த்.. படம் குறித்து என்ன சொல்லிருக்காங்கனு பாருங்க 😍

அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படம் உருவாகி வருகிறது.

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் ஜெயிலர் படத்தினை இயக்குகிறார். இந்த படத்தையும் அணணாத்த படத்தை தயாரித்த சன்பிக்சர்ஸ் நிறுவனம்  தயாரிக்கிறது.

இப்படத்தின் டைட்டில் லுக் & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடினார். 

Shivrajkumar Jackie sheroff portions filming in mangalore for Jailor Deets

Images are subject to © copyright to their respective owners.

அந்நாளில் ஜெயிலர் படத்தின் குறு முன்னோட்டம் வெளியானது. முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் இந்த படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் மோகன்லால், சிவராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன், தமன்னா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

Shiva Rajkumar Jackie sheroff portions filming in mangalore for Jailer Deets

Images are subject to © copyright to their respective owners.

இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரபல சண்டைப் பயிற்சி இயக்குனர் ஸ்டன் சிவா  ஜெயிலர் படத்தில் சண்டைக்காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். மேலும் பல்லவி சிங் ஜெயிலர் படத்தில் ஸ்டைலிஸ்ட் & ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிகின்றார்.

Shiva Rajkumar Jackie sheroff portions filming in mangalore for Jailer Deets

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜெயிலர் படத்தின் தற்போதைய படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர் நகரில் நடைபெற்று வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படப்பிடிப்பில் நான்கு நாட்களாக நடிகர் சிவ ராஜ்குமார் & ஜாக்கி ஷெராப் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன என்று நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றுடன் மங்களூர் படப்பிடிப்பு நிறைவுறும் என்றும் கூறப்படுகிறது.

Also Read | நானியின் மாறுபட்ட மிரட்டலான நடிப்பில் தசரா..டிரெண்டாகும் தமிழ் டீஸர்..!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Shiva Rajkumar Jackie sheroff portions filming in mangalore for Jailer Deets

People looking for online information on Jackie Shroff, Jailer, Mangalore, Shiva Rajkumar will find this news story useful.