KAAPAN USA OTHERS

'நான் இப்போ கலாய்க்குறது எதுக்குனா...' - வனிதாவுக்கு பிக்பாஸ் பிரபலத்தின் கணவர் பதில்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இன்னும் சில நாட்களில் ஃபைனல்ஸ் நடைபெறவிருக்கிறது. கடந்த வாரம் இயக்குநர் சேரன் இந்த நிகழ்ச்சியில் இருந்து எவிக்ட் செய்யப்பட்டு வெளியேறினார்.

Shiva Kumar answers Vanitha about Kamal Haasan's Bigg Boss 3

இந்த வார எலிமினேஷனுக்காக முகேன் தவிர மற்ற எல்லோரும் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்றைய தினம் மஹத் மற்றும் யாஷிகா ஆனந்த் உள்ளே வந்த புரோமோ வீடியோவை விஜய் டிவி ஒளிபரப்பியது.

இந்த சீசனில் மிகவும் பிரபலமான போட்டியாளர்களில் ஒருவர் வனிதா. இவரின் ஆக்ரோஷமான செயல்பாடுகள் ஒரு தரப்பினால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. கடந்த இருவாரங்களுக்கு முன்பு இவர் எவிக்ட் செய்யப்பட்டார்.

இந்நிலையில் வனிதா,  நடிகரும் முன்னாள் பிக்பாஸ் பிரபலமான சுஜா வரூணியின் கணவருமான சிவகுமாரின் பதிவிற்கு தனது ட்விட்டர் பக்கம் மூலம் பதிலளித்துள்ளார். அதில், உங்கள் அம்மாவை நன்றாக தெரியும். உங்கள் அப்பா என் குடும்பத்தில் ஒருவர் போன்றவர். உங்கள் அம்மா உங்கள் பிக்பாஸில் என்னைப் பற்றிய கருத்தை நினைத்து பெருமைப்படமாட்டார்கள். தற்போது உங்களுக்கும் குழந்தையுள்ளது. இன்னொரு தாயை பற்றி கருத்து கூறும் முன் பொறுப்புடன் இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த சிவகுமார், ''நன்றி அக்கா, தற்போது அந்த 1 மணி நேர நிகழ்ச்சி பற்றி என் பார்வையை பற்றி யோசித்து பார்த்தேன். அது 24 மணி நேர நிகழ்ச்சி அல்ல. என் அம்மாவிற்கு நீங்கள் நெருக்கமானவர். ஆனால் அது என் கருத்து'' என்று தெரிவித்துள்ளார்.

 

மற்றொரு பதிவில், ''நேரமிருந்தால் என்னுடைய ட்வீட்டுக்களை படித்து பாருங்கள். இல்லையென்றால் நான் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அனுப்புகிறேன். உங்கள பத்தின என்னுடைய கடைசி ட்வீட் கூட ஒரு அம்மாவா ரொம்ப பிடிச்சதுன்னு உங்களுக்கு ஆதரவாக இருந்தது. நான் இப்பவும் கலாய்க்றது எதுக்குன்னா அந்த 'ஏஞ்சல்' ராபர்ட் உங்க மூலமா பப்ளிசிட்டி தேடுறதுதான். நான் இல்ல..'' என்று பதிலளித்துள்ளார்.

 

தொடர்புடைய இணைப்புகள்

Shiva Kumar answers Vanitha about Kamal Haasan's Bigg Boss 3

People looking for online information on Bigg Boss 3, Shiva Kumar, Vanitha will find this news story useful.