ஆபாச வழக்கு தொடர்பாக ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்ட பின்னர், நடிகை ஷில்பா ஷெட்டி தனது முதல் இன்ஸ்டாகிராம் பதிவை வெளியிட்டுள்ளார்.
ஆபாசப் படங்களை உருவாக்குவது மற்றும் சில ஆப்ஸ் மூலம் அவற்றை வெளியிடுவது தொடர்பான வழக்கில், கடந்த திங்கள் கிழமை திங்கள்கிழமை (ஜூலை 19) இயக்குநர் ராஜ் குந்த்ரா மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே நடிகை ஷில்பா ஷெட்டி தனது படப்பிடிப்பிலிருந்தும், அவரது சமூக ஊடக பக்கங்களிலிருந்தும் சற்று ஓய்வு எடுத்துக் கொண்டார். பின்னர், நேற்றிரவு, அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில், ஜேம்ஸ் தர்பாரின் வாக்கியங்களை மேற்கோள் காட்டி ஒரு புத்தகத்திலிருந்து ஃபோட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார், அதில், ““Do not look back in anger, or forward in fear, but around in awareness!(கோபத்தில் திரும்பிப் பார்க்க வேண்டாம் அல்லது பயத்தில் முன்னோக்கிப் பார்க்க வேண்டாம் ஆனால் சுற்றி விழிப்புணர்வுடன் இருங்கள்)” குறிப்பிடப் பட்டுள்ளது.
மேலும், “எங்களை காயப்படுத்தியவர்கள், நாங்கள் உணர்ந்த ஏமாற்றங்கள், நாங்கள் அனுபவித்த துரதிர்ஷ்டம் ஆகியவற்றின் மீதான கோபத்துடன் திரும்பிப் பார்க்கிறோம். நாங்கள் எங்கள் வேலையை இழக்க நேரிடும், நோய்க்கு ஆட்படலாம், அல்லது நேசிப்பவரின் மரணத்தை காண நேரும் என்கிற அச்சத்தை நாங்கள் எதிர்நோக்குகிறோம்.” என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
தொடர்ந்து, “நான் உயிருடன் இருப்பதற்கு அதிர்ஷ்டசாலி என்பதை அறிந்து ஆழ்ந்த மூச்சு விடுகிறேன். நான் கடந்த கால சவால்களில் இருந்து தப்பித்தேன், எதிர்காலத்தில் சவால்களில் இருந்து தப்பிப்பேன். இன்று என் வாழ்க்கையை வாழ்வதில் இருந்து என்னை திசை திருப்ப எதுவும் தேவையில்லை.” என அந்த எழுத்துக்கள் பொருள் தருகின்றன.
தவிர, இந்த வழக்கில் ஷில்பா ஷெட்டி சம்பந்தப்படவில்லை என்பதை மும்பை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.