ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
Also Read | Sardar : “வாயால் வடை இல்ல.. பிரியாணியே செய்வாரு”.. சர்தார் இயக்குநர் குறித்து எடிட்டர் ரூபன் கலகல..
பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.
அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து, தன் மகன் நினைவாக இருப்பதாக கூறி பிக்பாஸில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். இந்த முறை பிக் பாஸ் வீட்டில் முதல் 40 நாட்களுக்கு நடக்க வேண்டிய சண்டைகள் அனைத்தும் முதல் வாரத்திலேயே நடந்து விட்டதாக கமல்ஹாசன் கடந்த வாரத்தில் தெரிவித்து இருந்தார்.
அதன்படி அசிம் ஆயிஷா சண்டை, தனலட்சுமி ஜனனி சண்டை, ஜனனி ஆயிஷா சண்டை, விக்ரமன் அசீம் சண்டை என பல விதமான சண்டைகள் பலவிதமான டாஸ்குகள் விஸ்வரூபம் எடுத்தன. இதன் தொடர்ச்சியாக தற்போது பொம்மை டாஸ்க் உருவெடுத்திருக்கிறது. இதுவரை அமைதியாக இருந்த மணிகண்டன் ராஜேஷூம் ஒரு கணம் ஆவேசமானதை காண முடிந்தது.
இந்நிலையில் இந்த டாஸ்கில் பொம்மையை எடுத்துக்கொண்டு ஷெரினா வெளியேற முற்படும்போது இரண்டு விதமான அணிகளும் மோதிக்கொள்கின்றனர். அப்பொழுது ஷெரினா நிலை தவறி கீழே விழுகிறார். அவரை சுற்றி ஹவுஸ்மேட்ஸ் நெரித்ததால் இந்த நிலை உண்டானது. இதனால் ஷெரினாவின் தலையில் அடிபடுகிறது. உடனடியாக ஹவுஸ் மேட்ஸ் அவருடைய அருகில் வந்து அவரை தூக்குகின்றனர். ஆனாலும் தலையை கையில் படுத்தபடி ஷெரினா அமர்ந்திருந்திருக்கிறார். முன்னதாக ஜனனியின் டாலை எடுத்திருந்த ஷெரினா, “யாராவது ஒருவர் ஆட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் என்பதால் நான் டாலை எடுத்தேன். ஆனால் நான் டால் ஹவுஸில் அதை வைக்கவில்லை. ஜனனி எலிமினேட் ஆனாலும் மீண்டு வந்து விடக் கூடியவர்” என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் ஷெரினாவுக்கு தலையில் அடிபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Also Read | “கார்த்தி 7 மணி நேரம் பாடுனாரு.. பாதி மியூசிக் மித்ரன் தான்”.. சர்தார் சீக்ரெட்ஸ் சொன்ன ஜிவி.!