விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் காலை வெளியான முதல் புரோமோவில் சாக்ஷி மற்றும் ஷெரினிடம் பேசும் வனிதா, இந்த பிக்பாஸ் வீட்டில் Affair நடக்கிறது என்று பேசினார். அப்போது Affair என்ற வார்த்தையைக் கேட்ட ஷெரின் கடும் கோபத்துடன் வனிதாவை கண்டித்தார்.
இந்நிலையில் இரண்டாவது புரோமோவில், சேரன் ஷெரினை சமாதானப்படுத்துகிறார். அப்போது ''Affairனு சொல்றாங்க சார் எப்படி சார் சும்மா இருக்க முடியும். அந்த மாதிரி வார்த்தை யூஸ் பண்ணது என்னால முடியல சார்.
அந்த பையன் பக்கமே நான் போகல. வேறு யாராவது வாயில் இருந்து அந்த வார்த்தை வந்திருந்தாலும் பரவாயில்ல. அனா அவ என்னோட ஃபிரெண்ட். எனக்கு கஷ்டமா இருக்கு. எனக்கு தர்ஷனோடவும் பேச வேணாம். வனிதாவோடவும் பேச வேணாம்'' என்று அழுகிறார்.