ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு இரு மொழிகளிலும் ஒரே சமயத்தில் தயாரிக்கும் படம் கணம். இப்படத்தை ஸ்ரீ கார்த்திக் இயக்குகிறார்.
இந்த படத்துக்கு ஜாக்ஸ் பீஜாய் இசையமைக்கிறார். இப்படம் அறிவியல் புனைகதை மற்றும் அம்மா மகன் சென்டிமென்ட் மையப்படுத்திய படமாக உருவாகியுள்ளது. தமிழில் எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் நடித்த நடிகர் ஷர்வானந்த், இப்படத்தில் நாயகனாக நடிக்க, அவருக்கு அம்மாவாக நடிகை அமலா, சுமார் 30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்கிறார்.
இந்த படத்தில் ரீது வர்மா கதாநாயகியாக நடிக்கிறார். நடிகர் நாசர் விஞ்ஞானியாக நடிக்கிறார். இவர்களுடன் நடிகர் சதீஷ் மற்றும் ரமேஷ் திலக் முக்கிய காதபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் அடுத்த பாடல் இன்று வெளியாகியுள்ளது. 'எல்லாமே மாறி போயாச்சோ' என்று தொடங்கும் இந்த பாடலை நடிகர் கார்த்தி பாடியுள்ளார். தெலுங்கு மொழியிலும் இதே பாடலுக்கு நடிகர் கார்த்தி குரல் கொடுத்துள்ளார்.
எல்லாமே மாறிப்போயாச்சோ !!!
Here’s the #Maaripocho video from #Kanam ❤️
Sung by @Karthi_Offl 😍
Penned by @madhankarky
A @JxBe Musical @ImSharwanand @riturv @amalaakkineni1 @actorsathish @thilak_ramesh @twittshrees @prabhu_sr #கணம்#KanamFromSep9 pic.twitter.com/8qxDgbqKzM
— DreamWarriorPictures (@DreamWarriorpic) August 26, 2022
யூடியூபில் வெளியான இப்பாடலை கேட்ட ரசிகர்கள் பலரும் நடிகர் கார்த்தியின் குரலில் பாடல் நன்றாக இருக்கிறது என்று பலவகையான பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறார்கள்.