www.garudavega.com

“அந்த TIME-ல எனக்கு நிறய பிரச்சனை.. அப்போ லிங்குசாமி சொன்ன பதில்..!” - பட விழாவில் ஷங்கர் உருக்கம்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர்   N லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் ராம் பொத்தினேனி நடித்திருக்கிம் ம் அதிரடி திரைப்படம் “தி வாரியர்”. Srinivaasaa Silver Screen சார்பில் ஸ்ரீனிவாசா சிட்துரி தயாரித்துள்ளார். பவன் குமார் இந்தப் படத்தை வழங்குகிறார். இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். ஆதி பினுஷெட்டி வில்லனாக நடித்துள்ளார்.  தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில்  இப்படம் ஜூலை 14 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

Shankar speech about Lingusamy The Warrior Ram Pothineni

Also Read | பொன்னியின் செல்வன் படத்தின் டீசர்.. விக்ரமின் அதிரடி வசனம்.. ஜெயம் ரவி & கார்த்தியின் MASS LOOK!

படத்தின் வெளியீட்டினை ஒட்டி தமிழ் திரை பிரபலங்கள், படக்குழுவினர் கலந்துகொண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் கோலகலமாக நடைபெற்றது.  

இந்நிகழ்வில் இயக்குநர் ஷங்கர் பேசுகையில், “வாரியர் என்ற தலைப்பே மிகவும் பிரமிக்க வைக்கிறது. ராம் பொத்தினேனியின் படங்கள் நான் பார்த்ததில்லை. இந்த படத்தை பார்க்க ஆவலோடு இருக்கிறேன். இந்த டிரெய்லரில் ராமைப் பார்க்கும்போது, அவர் துடிப்பாக இருக்கிறார். இந்தப் படத்தைப் பார்க்க ஆவலாக உள்ளேன். கீர்த்தி ஷெட்டி தனது முதல் படத்தில் ஒரு அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார், மேலும் அவர் பல படங்களில் பணியாற்றவும், கீர்த்தி சுரேஷ் போன்று தேசிய விருது பெறவும் வாழ்த்துகிறேன். டிரெய்லரே ஆனந்தம், ரன், சண்டக்கோழி போன்ற படங்களில் உள்ள  குடும்ப உணர்வுகள், யூத் ஃபீல், ஹீரோ-வில்லன் சண்டை ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கிறது. இந்த மூன்று படங்களின் கலவையும் இங்கே வாரியர் படத்தில் வரப்போகிறது. லிங்குசாமி ஒரு சிறந்த கவிஞர், நல்ல உள்ளம் கொண்டவர், இந்தப் படத்தின் மூலம் நிச்சயம் வெற்றி பெறுவார்.” என்று தெரிவித்துள்ளார்.

Shankar speech about Lingusamy The Warrior Ram Pothineni

மேலும் பேசியவர், “எல்லாருமே எதுக்காகவாச்சும் போராடிக்கிட்டே இருக்கோம். அந்த வகையில் எல்லாருமே வாரியர்ஸ் தான். தேவிஸ்ரீ பிரசாத்தின் புல்லட் பாடல் உட்பட பல பாடல்கள் ரிப்பீட் மோடில் இருக்கின்றன. என்னுடைய ரிப்பீட் மோடில் புஷ்பா பாடல்கள் இருக்கின்றன. கொரோனா டைம்ல எனக்கு நிறைய பிரச்சனைகள் இருந்தது. அப்போது லிங்குசாமியிடம் கூறினேன். அப்போது அவர் கவலப்படாதீங்க சார்.. உங்களுக்கு முன்னாடி போனா என் தலைதான் போகும் என்றார். அதான் ஃப்ரண்ட்ஷிப்” என கூறினார்.

Shankar speech about Lingusamy The Warrior Ram Pothineni

Also Read | "தமிழ்நாட்டின் சொத்து.!" - இளையராஜா MP பதவி குறித்து பாரதிராஜா பரபரப்பு பேச்சு.!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Shankar speech about Lingusamy The Warrior Ram Pothineni

People looking for online information on Lingusamy, Ram Pothineni, The Warrior will find this news story useful.