ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் 'தர்பார்'. லைக்கா புரொடக்ஷன் தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. நிகழ்வில் படத்தில் பணிபுரிந்த நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் ஷங்கர், நான் கேட்ட ரெண்டு பாட்டுமே ரொம்ப எனர்ஜியா இருக்கு. அனிருத் சூப்பர். ரொம்ப நல்லா இருக்கு. ஃபர்ஸ்டு அனிருத் கிட்ட ஒரு சிச்சுவேஷன் சொன்னேன். ஒரு டியூன் போட்டாரு. உடனே ஓக்கேவாய்டுச்சு. 2வது பாட்டும் ஃபர்ஸ்ட்டு டியூனே ஓகேவாய்டுச்சு.3வது பாட்டுக்கு 5 டியூன் போட்டாரு . போக போக செட்டாய்டும்னு சொன்னேன். கேட்ட உடனே பிடிக்கணும் சார்னு டீயூன் போட்டாரு. அந்த மெனக்கெடல் தான் இந்த சாங்க்ஸ் சிறப்பா வரதுக்கு காரணம் என்றார்.
முருகதாஸ் மிகச் சிறந்த ரைட்டர். அவர் படங்கள் எல்லாம் எனக்கு பிடிக்கும். அவர் படத்துல ஹீரோ கேரக்டரையும், வில்லன் கேரக்டரையும் சண்டக்கோழி மாதிரி ரெடி பண்ணுவாரு. ரஜினி சார் பத்தி சொல்லணும். ஷாட் ரெடி ஆர்ட்டிஸ்ட்ட கூப்டுங்கனு சொன்னதும் வந்துடுவாரு. அவருக்கு டைம் ஓட வேல்யூ தெரியும். ஒரு 5 நிமிஷம் வேஷ்டானா கூட 2, 3 லட்சம் புரொடியூசருக்கு செலவாகும்னு அவருக்கு தெரியும். ரஜினி சார் ஐ மிஸ்யூ சார்'' என்று பேசினார்.