Reliable Software
www.garudabazaar.com
www.garudavega.com

தனது திருநங்கை மகளை அறிமுகம் செய்து வைத்த ஷகீலா... வேற லெவல் அழகா இருக்காங்க..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

குக் வித் கோமாளி நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இறுதிகட்டத்தை எட்டியுள்ள போட்டியில் இந்த வாரம் கனி, பாபா பாஸ்கர், ஷகிலா அஸ்வின் மற்றும் பவித்ரா பங்கெடுத்துள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் ரவுண்ட் என்பதால் ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருந்தனர். அதுவும் பலரின் பேவரைட் அஸ்வின் மற்றும் பவித்ரா எலிமினேஷன் போட்டியில் பங்கெடுத்திருந்தனர். இதனையடுத்து யார் வெளியேறுவார் என்று ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் இன்றைய எபிசோடுக்காக காத்திருந்தனர். இந்நிலையில் பவித்ரா வெளியேறியுள்ளார்.

shakeela daughter mila photos மகளை அறிமுகம் செய்து வைத்த ஷகீலா

அதேபோல் இந்த சீசனில் ரசிகர்களுக்கு பல ஆச்சரியங்கள் கிடைத்திருக்கின்றன. முக்கியமாக ஷகிலாவை பற்றி சொல்லலாம். ஆரம்பத்தில் ரசிகர்கள் அவர் மேல் வைத்திருந்த அபிப்பிராயமும், தற்போது வைத்திருக்கும் அபிப்பிராயத்திற்கும் நூறு மடங்கு வித்தியாசங்கள் இருக்கின்றன. தற்போதைய தமிழக இளைஞர் மற்றும் குழந்தைகள் அவரை மம்மி என்று செல்லமாக அழைக்கின்றனர். அந்த அளவிற்கு அவர் மேல் மரியாதையும் அன்பும் தமிழ் ரசிகர்களுக்கு அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் அடிக்கடி நடிகை சகிலா பெண் ஒருவருடன் புகைப்படங்கள் வெளியிடுகிறார். ரசிகர்கள் சிலர் இவர் யாரென்று கேட்க ஷகிலா அதற்க்கு பதிலளித்துள்ளார். அவர் கூறும் பொழுது "இது என்னுடைய மகள் மிளா. இவர் இல்லையென்றால் என்னுடைய வாழ்க்கையில் எதுவுமே இல்லை. என்னுடைய நிறைய ஏற்றத்தாழ்வுகளில் எனக்கு துணையாக இருந்தவர். அதேபோல் அவருடைய ஏற்றத் தாழ்வுகளிலும் நான் துணையாக இருந்திருக்கிறேன்" என்று கூறியுள்ளார். ஷகிலாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று நம் அனைவருக்கும் தெரியும். மேலும் மிளா ஒரு திருநங்கை ஆவார். சினிமா துறையில் நடிகை மற்றும் பேஷன் டிசைனராக இருக்கிறார் என்பது  குறிப்பிடத்தக்கது.

தனது திருநங்கை மகளை அறிமுகம் செய்து வைத்த ஷகீலா... வேற லெவல் அழகா இருக்காங்க..! வீடியோ

Tags : Shakeela

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Shakeela daughter mila photos மகளை அறிமுகம் செய்து வைத்த ஷகீலா

People looking for online information on Shakeela will find this news story useful.