ஷகீலாவின் மகளும் நடிகையுமான மிளா தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் இட்ட உணர்ச்சிபூர்வமான பதிவு கவனத்தை ஈர்த்துள்ளது.
Also Read | ‘டாணாக்காரன்’ படத்தை இயக்குநருடன் பார்த்த காவலர்கள்… அதன் பின் எடுத்த சூப்பர் முடிவு!
மலையாள சினிமாவில் ஷகீலா…
தமிழ் சினிமாவில் 90 களில் அறிமுகமான ஷகீலா, ஒரு கட்டத்தில் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். அவர் நடிப்பில் பல பி கிரேட் படங்கள் வெளியாகி கேரளாவில் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றன. கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் ஷகீலாவுக்கு எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா மற்றும் சந்தானம் நடிப்பில் வெளியான பாஸ் என்கிற பாஸ்கரன் படம் தமிழ் சினிமாவில் ஒரு Re entry படமாக அமைந்தது. அதையடுத்து அவர் வரிசையாக பல தமிழ்ப் படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகிறார்.
Image-ஐ மாற்றிய குக் வித் கோமாளி…
விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2வது சீசனில் ஷகிலா ஒரு போட்டியாளராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி அவரின் ஒட்டுமொத்த இமேஜையும் மாற்றியது. மிகவும் நேர்த்தியாகவும், தன் வேலையை செய்யும் போது சின்சியராகவும் எந்த வித கவனச்சிதறலும் இல்லாமல் சமைப்பார். மணிமேகலை உள்ளிட்ட போட்டியாளர்கள் அவரிடம் நெருங்கிப் பழகி அவரை அம்மா அழைக்கும் அளவுக்கு அனைவரிடம் அன்போடு பழகினார். இந்த நிகழ்ச்சி மூலமாக ரசிகர்கள் மத்தியிலும் ஷகீலாவைப் பற்றிய பிம்பம் மாறியது. இந்த நிகழ்ச்சியில் தனது திருநங்கை மகளான மிளாவை சில எபிசோட்கள் அழைத்து வந்து ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
ஷகீலாவின் மகள் மிளா…
ஷகீலா தன் வாழ்க்கையில் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவர் மிளா என்ற திருநங்கையை தன்னுடைய மகளாக தத்தெடுத்துக் கொண்டுள்ளார். இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட அது கவனத்தை ஈர்க்கும். மிளா, சினிமா துறையில் நடிகையாகவும் மற்றும் பேஷன் டிசைனராகவும் பணியாற்றி வருகிறார். மிளா, திருநங்கையாக மாறுவதற்கு முன்பு சன் டிவியில் ஒளிபரப்பான தியாகம், மருதாணி போன்ற சீரியல்களில் ஆணாக நடித்தவர். இது சம்மந்தமானப் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகின. மிளாவைப் பற்றி ஷகீலா “இது என்னுடைய மகள் மிளா. இவர் இல்லையென்றால் என்னுடைய வாழ்க்கையில் எதுவுமே இல்லை. என்னுடைய நிறைய ஏற்றத்தாழ்வுகளில் எனக்கு துணையாக இருந்தவர். அதேபோல் அவருடைய ஏற்றத் தாழ்வுகளிலும் நான் துணையாக இருந்திருக்கிறேன்" என்று நெகிழ்ச்சியாக கூறியிருந்தார்.
So close to Mental Breakdown…
சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் மிளா பகிர்ந்த ஒரு பதிவு இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது. அதில் “Mental breakdown-க்கு (மனதளவில் உடைந்து போதல்) பக்கத்தில் இருக்கிறேன். என்னுடைய அப்பா திரும்பி என்னிடம் வரவேண்டும் என ஆசைப்படுகிறேன். உங்கள் அனைவரின் அன்பும் பிராத்தனையும் வேண்டும்” என உருக்கமாகக் கூறியுள்ளார். இந்த எமோஷனல் பதிவைப் பார்த்த அவரின் பாலோயர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8