விஜய் டி.வி ரியாலிட்டி ஷோக்களுக்கு மிகவும் பிரபலமான ஜனரஞ்சக சேனல்.
குறிப்பாக, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன்-2 சில மாதங்களுக்கு முன்புதான் முடிவடைந்தது. மக்களின் மனதில் விருப்பமான நிகழ்ச்சியாக மாறிப்போன இந்த நிகழ்ச்சியின் அடுத்த சீசன் எப்போது வரும் என்று அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஷகீலா, தமது சமூக ஊடகங்களில் தனது உடல்நலம் குறித்து வெளியான ஒரு அதிர்ச்சியான வதந்தியை குறித்து தெளிவு படுத்தியுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோவில் பேசிய அவர் “ஹலோ, ஹலோ இது ஷகீலா. நேற்று சில செய்திகளைக் கேட்டேன். நிச்சயமாக அது உண்மை இல்லை, அப்படி எதுவும் இல்லை! நான் இங்கே நலமாக இருக்கிறேன், மிகவும் ஆரோக்கியமாகவும், மிகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன், உண்மையில் ஒரு பெரிய புன்னகையுடன் இருக்கிறேன்.
எனவே, ரசிகர்கள் என் மீது காட்டும் அக்கறைக்கு நன்றி. அதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், ஏனென்றால் யாரோ ஒருவர் என்னைப் பற்றி சோகமான/கெட்ட செய்திகளைக் பரப்பியுள்ளார். ஆனால் உங்களிடமிருந்து எனக்கு நிறைய அழைப்புகள் மற்றும் அதிக அன்பு வருகிறது. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி. அந்த நபர் கொடுத்த சோகமான செய்திக்கும் மிக்க நன்றி, ஏனெனில் அவர் உங்கள் அனைவரையும் மீண்டும் என்னைப் பற்றி யோசிக்க வைத்தார். ” என குறிப்பிட்டுள்ளார்.