நடிகர் ஷாருக்கான் நடிக்கும் பதான் படத்தின் முதல் 5 நாள் வசூல் நிலவரம் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கைக்குழந்தையுடன் சாமி தரிசனம் செய்த காஜல் அகர்வால்..!
பான் இந்திய படமாக இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் கடந்த ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் பதான் படம் வெளியாகி உள்ளது. 5 வருடங்களுக்கு பிறகு ஷாருக்கான் பிரதான கதாபாத்திரம் ஏற்று நடித்த படமாக பதான் அமைந்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
பதான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் முக்கிய ரோலில் வில்லனாக நடித்துள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
பழம்பெரும் யாஷ் ராஜ் நிறுவனத்தின் 50வது படமான பதான் படம் IMAX வடிவத்திலும் ரிலீஸ் ஆகி உள்ளது. யாஷ் ராஜ் பிலிம்ஸின் Spy Universe படங்களில் நான்காவது படமாக பதான் படம் வெளியாகி உள்ளது. முன்னதாக சல்மான் கான் ஏக் தா டைகர் (2012), டைகர் ஜிந்தா ஹே (2017) , ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வார் (2019) திரைப்படங்கள் வெளியாகி உள்ளன.
Images are subject to © copyright to their respective owners.
இந்தியில் ஹிர்திக் ரோஷன் நடிப்பில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஆன 'வார்' படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் 'பதான்' படம் உருவாகி உள்ளது.
பதான் படம் முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் 106 கோடி ரூபாயை வசூலித்தது. முதல் இரண்டு நாளில் 219.6 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது. இந்தி சினிமா வரலாற்றில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படமாக பதான் படம் ஏற்கனவே சாதனை படைத்துள்ளது. மேலும் பதான் படத்தின் முதல் நாள் வசூலை விட இரண்டாவது நாள் வசூல் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Images are subject to © copyright to their respective owners.
முதல்முறையாக முதல் இரண்டு நாளில் தொடர்ந்து 100+ கோடி ரூபாயை தினமும் வசூலித்த முதல் இந்தி படமாக பதான் படம் அமைந்துள்ளது. ஐந்து நாளில் பதான் படம் உலகம் முழுவதும் 543 கோடி ரூபாயை வசூலித்து உள்ளது. இந்தி சினிமா வரலாற்றில் முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த படமாக பதான் படம் சாதனை படைத்துள்ளது. இந்த திரைப்படம் இந்தியாவில் மட்டும் 335 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. வெளிநாடுகளில் இந்திய ரூபாய் மதிப்பில் 208 கோடி ரூபாயை வசூலித்துள்ளது என அதிகாரப்பூர்வமாக பிரத்யேக வடிவமைப்பு போஸ்டருடன் படநிறுவனம் அறிவித்துள்ளது.
Also Read | "வெறிகொண்ட சிங்கம்".. இந்தியன் 2 ஷூட்டிங்கில் இயக்குனர் ஷங்கர் குறித்து பிரபல இயக்குனர் பதிவு!