RRR Others USA
www.garudavega.com

“நான் விஜய் சாரை வைத்து”... ‘ஆச்சார்யா’ இயக்குநர் ரவி மரணம்! ‘ஷாஜகான்’ இயக்குநர் ரவி இரங்கல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மறைந்த இயக்குநர் ஆச்சார்யா ரவிக்கு, ஷாஜகான் திரைப்பட இயக்குநர் ரவி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.  

shahjahan director ravi condolence to Acharya Ravi demise

ஆச்சார்யா ரவி

விக்னேஷ் நடித்து, ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து உருவான திரைப்படம் ஆச்சார்யா. இந்த திரைப்படத்தை இயக்கியதால், இப்படத்தின் இயக்குநர் ரவி, ஆச்சார்ய ரவி என அழைக்கப்பட்டார். 

shahjahan director ravi condolence to Acharya Ravi demise

மருத்துவமனையில் சிகிச்சை

இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக இருந்துவந்த இவர் சில காலம் காஞ்சிபுரத்தில் வசித்து வந்தார். அதன் பின்னர் உடல்நலக்குறைவால், மதுரை மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் தான் சிகிச்சைப் பலனின்றி நேற்றைய தினம் ஆச்சார்யா ரவி உயிரிழந்தார். 

shahjahan director ravi condolence to Acharya Ravi demise

இயக்குநர் சீனு ராமசாமியின் ட்வீட்

இந்த தகவலை தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் சீனு ராமசாமி பதிவிட்டு, மறைந்த இயக்குநர் ரவியின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருந்தார். மேலும் படைப்பாளிகள் நம் இதயத்திலும் சிந்தனையிலும் என்றும் வாழ்வார்கள் என்று அந்த ட்வீட்டில் சீனு ராமசாமி தெரிவித்தார். 

shahjahan director ravi condolence to Acharya Ravi demise

ஷாஜகான் பட இயக்குநர் ரவி

இதனிடையே மறைந்த இயக்குநர் ரவியை, ஷாஜகான் இயக்குநர் என சிலர் கருதி வந்தனர். சில ஊடகங்களிலும் அப்படியே தகவல் வெளியானது. இந்நிலையில் விஜய் நடித்த ஷாஜகான் பட இயக்குநர் ரவி தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த குழப்பங்கள் களையப்பட்டுள்ளன.

shahjahan director ravi condolence to Acharya Ravi demise

கடந்த 2001-ஆம் ஆண்டு விஜய், ரிச்சா பொலாட், விவேக் மற்றும் பலர் நடித்து வெளியான  திரைப்படம் ஷாஜகான். விஜய் நடிப்பில் மணி சர்மா இசையில் உருவான இந்த திரைப்படம் அன்றைய நாளில் பெரும் ஹிட் திரைப்படமாக அமைந்தது. 

shahjahan director ravi condolence to Acharya Ravi demise

இப்படத்தின் இயக்குநர் ரவி தற்போது தம்முடைய குறிப்பில், “வணக்கம். நான் விஜய் சாரை வைத்து ஷாஜகான் படத்தை இயக்கிய ரவி. நண்பர் ‘ஆச்சார்யா’ பட இயக்குநர் ரவி மரணம் அறிந்து அவரது ஆன்மா சாந்தி அடையவும், அவரை இழந்து வாடும் அவரது கும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார். 

Also Read: ‘ரவி அண்ணா!’.. ஆச்சார்யா ரவி மரணம்!.. பாலா & சீமானை tag செய்து பிரபல இயக்குநர் எமோஷனல் பதிவு!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Shahjahan director ravi condolence to Acharya Ravi demise

People looking for online information on Acharya Ravi, ஆச்சார்யா ரவி, ஷாஜகான், Shahjahan director, Shahjahan director ravi, Thalapathy Vijay, Vijay will find this news story useful.