The Route & Passion studios தயாரிப்பில், நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும், மலையாள திரைப்படம் ‘சேஷம் மைக்-இல் ஃபாத்திமா’ படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது.
The Route & Passion studios தயாரிப்பில், நடிகை கல்யாணி பிரியதர்ஷன் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, மனு C குமார் இயக்கும் புதிய மலையாள திரைப்படம் ‘சேஷம் மைக்-இல் ஃபாத்திமா’ படத்தின் அறிவிப்பை தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இயக்குநர் மனு C குமார் இயக்க, இசையமைப்பாளராக ஹேஷாம் அப்துல் வஹாப், ஒளிப்பதிவாளராக சந்தான கிருஷ்ணன், எடிட்டராக கிரண் தாஸ் மற்றும் கலை இயக்குநராக நிமேஷ் தானூர் ஆகியோர் இப்படத்தில் பணிபுரிகின்றனர். படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 14 முதல் தொடங்குகிறது.
தயாரிப்பாளர்கள் ஜெகதீஷ் பழனிசாமி & சுதன் சுந்தரம் தயாரிக்கின்றனர். ஜெகதீஷ் பழனிச்சாமி நடிகர் விஜய்யின் மேலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read | தனது பணியாளர் இல்ல திருமண விழா.. தாலி எடுத்து கொடுத்த "சீயான் விக்ரம்"! வைரல் போட்டோஸ்