கொரோனா வைரஸ் ஊரடங்கின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்துள்ளது. வழக்கமாக வெகு விமர்சையாக நடைபெறும் வீட்டு விசேஷங்கள் கூட தற்போதைய சூழ்நிலையின் காரணமாக எளிமையான முறையில் நடைபெறுகின்றன.
இந்நிலையில் செம்பருத்தி சீரியல் புகழ் கதிர்வேல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது குறித்து ஃபோட்டோ வெளியிட்டு அறிவித்துள்ளார். அதில், ''இது எனக்கு மிக முக்கியமான நாள். எனக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.
என்னை மிகவும் நேசிக்கும் உங்களை அழைக்காததற்கு மன்னித்துக்கொள்ளுங்கள். அதற்கு காரணம் இந்த ஊரடங்கு தான். நான் உங்களை என் திருமணத்துக்கு நிச்சயம் அழைப்பேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். அவருக்கு பிரபலங்கள் ரசிகர்கள் ஒரு சேர வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.