சூர்யாவின் அரசியல் வெறித்தனத்தை காட்ட வரும் அடுத்த வீடியோ விரைவில்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சூர்யா நடித்துள்ள ‘என்.ஜி.கே’ திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Selvaraghvan-Suriya's NGK Trailer and Auido will be releasing on April 29

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கியுள்ள ‘என்.ஜி.கே’ என்கிற ‘நந்த கோபாலன் குமார்’ திரைப்படம் வரும் மே.31ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது. 

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர். காதலர் தினத்தை முன்னிட்டு இப்படத்தின் டீசர் கடந்த (பிப்.14) அன்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை குவித்தது.

அரசியல் கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘என்.ஜி.கே’ ரிலீசுக்காக நீண்ட நாட்களாக காத்திருக்கும் சூர்யா ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வரும் ஏப்.29ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

அனல் பறக்கும் அரசியல் களத்தில் செல்வராகவன் - சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

சூர்யாவின் அரசியல் வெறித்தனத்தை காட்ட வரும் அடுத்த வீடியோ விரைவில்..! வீடியோ

Selvaraghvan-Suriya's NGK Trailer and Auido will be releasing on April 29

People looking for online information on NGK, NGK Trailer, Selvaraghavan, Suriya will find this news story useful.