செல்வராகவன் அடுத்த படம் - இயக்குநரின் புதிய தகவல்! புதுப்பேட்டை - ஆயிரத்தில் ஒருவன் பார்ட்-2.?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் செல்வராகன் தனது அடுத்த படம் பற்றிய புதிய தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

செல்வராகவன் அடுத்த பட தகவல் | selvaraghavan's next film script details

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் இயக்கிய காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதை தொடர்ந்து இவர் கடந்த வருடம் சூர்யாவை வைத்து என்.ஜி.கே படத்தை இயக்கினார். மேலும் இவர் இயக்கித்தில் உருவாகியுள்ள நெஞ்சம் மறப்பதில்லை படம் ரிலீஸுக்காக காத்திருக்கிறது.

இந்த நிலையில் செல்வராகன் தனது அடுத்த படத்தை பற்றி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்த தனது பதிவில், 'எனது ஸ்க்ரிப்ட்டுக்கான ஃபைனல் டச்களை சேர்த்து கொண்டிருக்கிறேன்' என தெரிவித்துள்ளார். மேலும் அவர் திரைக்கதை எழுதும் லேப்டாப்பின் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இதையடுத்து இந்த ஸ்க்ரிப்ட் புதுப்பேட்டை அல்லது ஆயிரத்தில் ஒருவனின் இரண்டாம் பாகமா என ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் எண்ணம் இருப்பதாக செல்வராகவன் முன்னர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

செல்வராகவன் அடுத்த பட தகவல் | selvaraghavan's next film script details

People looking for online information on Aayirathil Oruvan, Pudhupettai, Selvaraghavan will find this news story useful.