இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதியன்று வெளியாகி இருந்த திரைப்படம் "நானே வருவேன்".
இந்த படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருந்தார். மேலும், இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
நானே வருவேன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் அதே வேளையில், பொன்னியின் செல்வன் படத்திற்கு போட்டியாக நானே வருவேன் திரைப்படத்தை ரிலீஸ் செய்ததாக சோஷியல் மீடியாவில் அதிகம் கருத்துக்கள் பகிரப்பட்டு வந்தது.
இது தொடர்பாக, படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, Behindwoods சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், விளக்கம் அளித்திருந்தார். இதனிடையே, நானே வருவேன் படத்தின் இயக்குனர் செல்வராகவன், Behindwoods சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை தற்போது அளித்துள்ளார். இதில், தனது திரைப்படம் பற்றி பல சுவாரஸ்யமான விஷயங்களையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
தொடர்ந்து, தனது படத்தில் காமெடி நடிகர் யோகிபாபுவை நடிக்க வைத்தது பற்றிய பேசிய செல்வராகவன், "அவரை குறைவான இடத்தில் பயன்படுத்தியதால் நான் அதிகம் வருத்தப்பட்டேன். இவருக்கு இன்னும் அதிகம் காட்சிகள் இருந்திருக்கலாமே என எனக்கு தோன்றியது. நிச்சயம் வரும் காலத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்தால், யோகிபாபுவை சோலோ ஹீரோவாக வைத்து ஒரு படம் இயக்குவேன்.
அவரிடமே நீங்கள் நன்றாக நடிக்கிறீர்கள், நல்ல டைமிங் இருக்கிறது என கூறினேன். யோகி பாபு மிகவும் அற்புதமான நடிகர். இதில், குறைவாக தான் பயன்படுத்த முடிந்தது" என்றார்.
தொடர்ந்து, பொன்னியின் செல்வன் படம் ரிலீஸ் ஆன சமயத்தில் நானே வருவேன் ரிலீஸ் ஆனதன் விளக்கத்தையும் செல்வராகவன் வெளிப்படுத்தி இருந்தார். நடிகர் தனுஷ் ஸ்க்ரிப்ட் பணிகளில் ஈடுபடுவது குறித்து பேசிய செல்வராகவன், ரசிகர்களிடம் உருவாகி உள்ள மாற்றங்கள் குறித்தும் வியந்து போய் சில கருத்துக்களை செல்வராகவன் குறிப்பிட்டிருந்தார்.
செல்வராகவன் நேர்காணலின் முழு வீடியோவைக் காண: