பொன்னியின் செல்வன் பாடல்கள் குறித்து செல்வராகவன் போட்டுள்ள ட்வீட் தற்போது சினிமா ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.
Also Read | தீபாவளி கொண்டாடிய பிரியங்கா சோப்ரா.. குழந்தையின் லேட்டஸ்ட் போட்டோவை வெளியிட்டு வாழ்த்து!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் செல்வராகவன். புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், 7G ரெயின்போ காலனி உட்பட செல்வராகவன் இயக்கத்தில் உருவான நிறைய படங்கள், பலரின் பேவரைட் படமாகவும் உள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதியன்று, செல்வராகவன் இயக்கத்தில் "நானே வருவேன்" திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தனுஷ், இந்துஜா உள்ளிட்ட பலரும் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர்.
இதனிடையே, பொன்னியின் செல்வன் படத்தின் ஆல்பம் குறித்து இயக்குனர் செல்வராகவன் போட்டுள்ள ட்வீட் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு திரைப்படங்களை அதே பெயரில் இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார் இயக்குனர் மணிரத்னம். இதன் முதல் பாகம், கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதியன்று வெளியாகி இருந்தது.
உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்ற பொன்னியின் செல்வன் 1 திரைப்படம், இதுவரை 450 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜெயராம் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இணையமைத்திருந்தார்.
பொன்னி நதி, தேவராளன் ஆட்டம், சோழா சோழா உள்ளிட்ட பொன்னியின் செல்வன் 1 படத்தின் அனைத்து பாடல்களும் பட்டித் தொட்டி எங்கும் ஹிட்டடித்திருந்தது. படத்தின் பின்னணி இசை கூட பெரிய அளவில் பேசு பொருளாக மாறிய இருந்தது.
பொன்னியின் செல்வன் பாடல்கள் பற்றி ட்வீட் செய்திருந்த செல்வராகவன், "என்னுடைய அனுபவத்தில் சிறந்த மியூசிக் ஆல்பம் என்றால் எந்தவித சந்தேகமும் இன்றி நிச்சயம் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் மணிரத்னம் சாரின் பொன்னியின் செல்வன் தான். மிக மிக சிறிய சப்தங்களில் கூட கவனம் செலுத்தி உள்ளது பிரம்மிக்க வைக்கிறது" என குறிப்பிட்டிருந்தார்.
பொன்னியின் செல்வன் ஆல்பம் குறித்து செல்வராகவன் குறிப்பிட்ட கருத்து, இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வந்தது. இதனைக் கவனித்த இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், "நன்றி செல்வா" என குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார். அதே போல, மெட்ராஸ் டாக்கீஸ் ட்விட்டர் பக்கத்திலும் செல்வராகவனுக்கு நன்றியை குறிப்பிட்டு ட்வீட் பகிரப்பட்டுள்ளது.
Also Read | சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்'.. கதை நடக்கும் காலக்கட்டம் குறித்து வெற்றிமாறன் EXCLUSIVE அப்டேட்!