செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை.
திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா காசண்ட்ரா, நந்திதா ஸ்வேதா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சாத்தானுக்கும் கடவுளுக்குமான போராக இந்த படத்தில் கதை சொல்லப்படுகிறது.
@selvaraghavan sir's Controversial video clip . Selavaraghavan English interview is here#Periyar #selvaraghavan #selvaragavan #aayirathiloruvan2 #aayirathiloruvan https://t.co/ewsXMXGZTo pic.twitter.com/Rjfll5JtAB
— M S Prashanth (@m_s_prashanthh) March 9, 2021
இதுகுறித்து செல்வராகவனிடம் நேர்காணல் ஒன்றில் பரத்வாஜ் ரங்கன், “ராம்சே எனும் ராமசாமியாக எஸ்.ஜே.சூர்யா வருகிறார். ஆனால் அவர் கடவுளுக்கு எதிராக நிறுத்தப்படுகிறார். கடவுளுக்கு எதிராக ராமசாமி எனும் ஓர் கதாபாத்திரத்தை படைத்திருப்பதற்கு பின்னால் குறியீடுகள் ஏதேனும் உள்ளதா?” என கேட்கிறார்.
நண்பர்களே ! அந்த நேர் காணலில் அவர் கேட்ட கேள்வி எனக்கு புரியவில்லை. இங்கு நீங்கள் சுட்டிக் காட்டிய பின்புதான் புரிகின்றது. கவனமாக இருந்திருக்க வேண்டும். மன்னிக்கவும்.
— selvaraghavan (@selvaraghavan) March 9, 2021
இதற்கு செல்வராகவன் பதில் சொல்ல தாமதமாகிறது. எனினும் புன்னகை செய்தபடி இருந்துள்ளார். நீங்கள் பதில் சொல்ல வேண்டுமென்றில்லை. ஒரு குறிப்பு மொழியை உதிர்த்தாலே போதும் என்று கூறுகிறார். சில நொடிகளில் செல்வராகவன் சிரித்தபடி யெஸ் என்கிறார். இதை பலரும் சுட்டிக்காட்டவே, தற்போது செல்வராகவன், இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், “நண்பர்களே ! அந்த நேர் காணலில் அவர் கேட்ட கேள்வி எனக்கு புரியவில்லை. இங்கு நீங்கள் சுட்டிக் காட்டிய பின்புதான் புரிகின்றது. கவனமாக இருந்திருக்க வேண்டும். மன்னிக்கவும்.” என்று ட்வீட் பதிவிட்டுள்ளார்.
Exact truth! https://t.co/eVs8CeXJ6K
— selvaraghavan (@selvaraghavan) March 9, 2021
இதனிடையே “நேர்கானலில் ஒரு விஷயம் தெளிவாக இருந்தது. பொதுவாக ஒரு நிகழ்வின் இறுதி தருவாயில் நிகழ்ச்சியை நிறைவு செய்யும் உரையாடலையே நாம் எதிர்பார்ப்போம். அது ஒரு நன்றி/பை சொல்லும் உரையாடலாக இருக்கும் என கருதி நாம் அதிக கவனம் செலுத்த மாட்டோம். அதையே செல்வராகவனும் செய்தார். மற்றபடி செல்வராகவன் ஆற்றிய வினைக்கு பெரியார் அவர்களுடன் எந்த தொடர்பும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.” என்று பதிவிட்டிருந்த ஒருவரின் ட்வீட்டை ரீட்வீட் செய்த செல்வராகவன், “மிகச்சரியான உண்மை!” என்று பதிவிட்டுள்ளார்.
@iam_SJSuryah @selvaraghavan He means it clearly in this interview.Even though he recognized his mistake he mentioned apologise for his statement,it is better to avoid ad show positive gratitude towards him. #spereadlove Show your emotions on your voting day rather than hurt him. pic.twitter.com/HoNK9vVQ8E
— lax (@followulax) March 9, 2021
இதனிடையே முன்னதாக விகடனின் நேர்காணல் ஒன்றில் கேட்கப்பட்டபோது ராமசாமி என்பது தமது தாத்தாவின் பெயர் என்று செல்வராகவன் பதில் அளித்த வீடியோவும் பரவி வருகிறது.
ALSO READ: 'அடுத்த படத் தயாரிப்பு பணியில் பாலா!'.. அந்த பட ஹீரோவே பகிர்ந்த வைரல் ஃபோட்டோ!