இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதியன்று வெளியாகி இருந்த திரைப்படம் "நானே வருவேன்".
இந்த படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருந்தார். மேலும், இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
நானே வருவேன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் அதே வேளையில், பொன்னியின் செல்வன் படத்திற்கு போட்டியாக நானே வருவேன் திரைப்படத்தை ரிலீஸ் செய்ததாக சோஷியல் மீடியாவில் அதிகம் கருத்துக்கள் பகிரப்பட்டு வந்தது.
இது தொடர்பாக, படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, Behindwoods சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், விளக்கம் அளித்திருந்தார். இதனிடையே, நானே வருவேன் படத்தின் இயக்குனர் செல்வராகவன், Behindwoods சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை தற்போது அளித்துள்ளார். இதில், தனது திரைப்படம் பற்றி பல சுவாரஸ்யமான விஷயங்களையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
தான் நானே வருவேன் படத்தில் நடித்தது பற்றி பேசிய செல்வராகவன், "அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியவர் வரவில்லை. அடுத்த நாள் அந்த ஷூட்டிங் முடித்தே ஆக வேண்டும். எல்லாரும் சேர்ந்து நீங்களே அதை பண்ணி விடுங்கள் என கூறினார்கள். அதற்கு நான் வலுக்கட்டாயமாக தள்ளப்பட்டேன். படத்தையும் முடிக்க வேண்டும் என்பதால் நடந்தது தான் அது" என கூறினார்.
தொடர்ந்து, பொன்னியின் செல்வன் படம் ரிலீஸ் ஆன சமயத்தில் நானே வருவேன் ரிலீஸ் ஆனதன் விளக்கத்தையும் செல்வராகவன் வெளிப்படுத்தி இருந்தார். நடிகர் தனுஷ் ஸ்க்ரிப்ட் பணிகளில் ஈடுபடுவது குறித்தும், நடிகர் யோகிபாபு நானே வருவேன் திரைப்படத்தில் நடித்தது குறித்தும் ஏராளமான தகவல்களை பகிர்ந்து கொண்டார் செல்வராகவன். இது தவிர, ரசிகர்களிடம் உருவாகி உள்ள மாற்றங்கள் குறித்தும் வியந்து போய் சில கருத்துக்களை செல்வராகவன் குறிப்பிட்டிருந்தார்.
செல்வராகவன் நேர்காணலின் முழு வீடியோவைக் காண: