இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதியன்று வெளியாகி இருந்த திரைப்படம் "நானே வருவேன்".
இந்த படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருந்தார். மேலும், இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
நானே வருவேன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் அதே வேளையில், பொன்னியின் செல்வன் படத்திற்கு போட்டியாக நானே வருவேன் திரைப்படத்தை ரிலீஸ் செய்ததாக சோஷியல் மீடியாவில் அதிகம் கருத்துக்கள் பகிரப்பட்டு வந்தது.
இது தொடர்பாக, படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, Behindwoods சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், விளக்கம் அளித்திருந்தார். இதனிடையே, நானே வருவேன் படத்தின் இயக்குனர் செல்வராகவன், Behindwoods சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை தற்போது அளித்துள்ளார். இதில், தனது திரைப்படம் பற்றி பல சுவாரஸ்யமான விஷயங்களையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
"அடுத்தடுத்து ஃபெஸ்டிவல் வரும் நேரத்தில் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆவதில் என்ன தவறு இருக்கிறது?. பொன்னியின் செல்வன் எவ்வளவு பெரிய படம். அதனுடன் நானே வருவேன் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற போட்டி எண்ணமெல்லாம் எதுவும் எங்களுக்கு இல்லை. ஃபெஸ்டிவல் சமயத்தில் முன்பிருந்த கலாச்சாரத்தை திருப்பி கொண்டு வர வேண்டும். பொங்கலின் போதெல்லாம் முன்பு நான்கு படங்கள் வரை ரிலீஸ் ஆகும். ஆனால், இப்போது அந்த கலாச்சாரம் அழிந்து விட்டது. அதனை மீண்டும் கொண்டு வருவதற்காக கலைப்புலி சார் செய்த ஒரு சிறிய முயற்சி தான் இது" என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து, நடிகர் தனுஷ் ஸ்க்ரிப்ட் பணிகளில் ஈடுபடுவது குறித்தும், நடிகர் யோகிபாபு நானே வருவேன் திரைப்படத்தில் நடித்ததும் குறித்தும் ஏராளமான தகவல்களை பகிர்ந்து கொண்டார் செல்வராகவன். இது தவிர, ரசிகர்களிடம் உருவாகி உள்ள மாற்றங்கள் குறித்தும் வியந்து போய் சில கருத்துக்களை செல்வராகவன் குறிப்பிட்டிருந்தார். அதே போல, தனுஷ் நடிப்பில் அவர் மெருகேற்றிக் கொண்டது தொடர்பான விஷயங்களையும் ஆச்சரியத்துடன் பார்த்ததாக செல்வராகவன் குறிப்பிட்டிருந்தார்.
செல்வராகவன் நேர்காணலின் முழு வீடியோவைக் காண: