இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதியன்று வெளியாகி இருந்த திரைப்படம் "நானே வருவேன்".
இந்த படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருந்தார். மேலும், இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். மேலும், நானே வருவேன் படத்திற்கான கதையையும் தனுஷ் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் மத்தியில் நானே வருவேன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் இயக்குனர் செல்வராகவன் Behindwoods சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.
அதில், நானே வருவேன் திரைப்படம் குறித்தும், தனுஷ் குறித்தும், தான் படத்தில் நடித்தது குறித்தும் பல சுவாரஸ்யங்களை செல்வராகவன் பகிர்ந்து கொண்டார். தான் நானே வருவேன் படத்தில் நடித்தது பற்றி பேசிய செல்வராகவன், "அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியவர் வரவில்லை. அடுத்த நாள் அந்த ஷூட்டிங் முடித்தே ஆக வேண்டும். எல்லாரும் சேர்ந்து நீங்களே அதை பண்ணி விடுங்கள் என கூறினார்கள். அதற்கு நான் வலுக்கட்டாயமாக தள்ளப்பட்டேன். படத்தையும் முடிக்க வேண்டும் என்பதால் நடந்தது தான் அது" என கூறினார்.
மேலும் நானே வருவேன் படம் ரிலீஸ் ஆன சமயத்தில் தான் இருந்த விதம் பற்றி பேசிய செல்வராகவன், "படம் ரிலீஸ் ஆகும் முதல் 3 நாட்கள், ஒரு வெற்று மனநிலைக்கு சென்று விடுவீர்கள். அது மிகவும் மோசமான காலமாகவும் இருக்கும். அதை அனுபவித்தவர்களுக்கு புரியும். அனைத்து இயக்குனர்களிடம் இதைக் கேட்டாலே சொல்வார்கள். எப்படியாவது சாப்பிட்டு விட்டு தூங்கினால் போதும் என்று தான் இருப்போம்" என்றார்.
தொடர்ந்து பேசிய செல்வராகவன், "படம் முடித்து அதனை பார்த்த போது தான், குடும்பமாக வந்து நானே வருவேன் படத்தை ரசிக்கும் அளவுக்கு அது உருவாகி உள்ளது என தெரிந்தது. நானும், தனுஷும் பேமிலி மேனாக இருப்பதால் தான், இப்படி உருவாகி இருக்கும் என்றும் நான் நினைத்துக் கொண்டேன்" என தெரிவித்தார்.
இது தவிர இன்னும் பல சுவாரஸ்ய விஷயங்களை செல்வராகவன் பகிர்ந்து கொண்டார். இது தொடர்பான முழு வீடியோவைக் காண: