இயக்குநர் சீனுராமசாமி கூகுள் CEO சுந்தர்பிச்சைக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
தென் மேற்கு பருவகாற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குநர் சீனு ராமசாமி. இவரது தென்மேற்கு பருவக்காற்று படம் சிறந்த படத்திற்கான தேசிய விருது உட்பட 3 தேசிய விருதுகளை பெற்றது.
தற்போது மாமனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கி வருகிறார். இந்நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி, கூகுள் CEO சுந்தர் பிச்சைக்கு தமிழில் டிவிட்டர் மூலம் ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்
அதாவது, கூகுல் வழிகாட்டி (Google maps) தாய்மொழியில் திசையின் பெயர்களை சொன்னால் சுகமாய் இருக்கும்,இதை செய்ய முடிந்தால் பெருமையெல்லாம் உம்மைச்சேரும் என டிவிட்டி சுந்தர் பிச்சையை டேக் செய்துள்ளார்
கூகுள் CEO சுந்தர் பிச்சை தமிழகத்தை சேர்ந்தவர். இதன் காரணமாக அவருக்கு தனது கோரிக்கையை தமிழிலேயே டிவிட்டியிருக்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி. சுந்தர் பிச்சை கூகுள் சிஇஓவான பிறகு தமிழர்களும் பயன்பெரும் வகையில் கூகுள் மேம்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கூகுல் வழிகாட்டி (Google maps) தாய்மொழியில் திசையின் பெயர்களை சொன்னால் சுகமாய் இருக்கும்,இதை செய்ய முடிந்தால் பெருமையெல்லாம் உம்மைச்சேரும் @sundarpichai
— Seenu Ramasamy (@seenuramasamy) October 20, 2019