ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக திரைப்பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சூர்யாவின் கருத்துக்கு எதிராக எழும் கருத்துக்களுக்கு எதிராகவும், சூர்யாவை விவாதத்துக்கு அழைப்போருக்கு பதில் அளிக்கும் வகையிலும் சீமான் பேசியுள்ளார்.
அதாவது சூர்யாவுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சூர்யாவை தனிநபரென நினைத்து அவரை அச்சுறுத்தவோ, மிரட்டவோ முனைந்தால் எதிர்விளைவுகள் மோசமாக இருக்கும்” என பாஜகவை குறிப்பிட்டு சீமான் பதில் அளித்துள்ளார்.
மேலும் சூர்யாவை விவாதத்துக்கு அழைக்கும் அதே மேடையில் தானும் இருக்க, தன்னோடும் தன் இயக்கத் தம்பிகளுடனும் விவாதத்தை எதிர்கொள்ள தயாரா? என்றும் அறைகூவல் விடுத்துள்ளார்.
ஒளிப்பதிவு சட்டத் திருத்தத்திற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்ததற்காக, தம்பி சூர்யாவை தனிநபரென நினைத்து பாஜகவினர் அச்சுறுத்தவோ, மிரட்டவோ முனைந்தால் எதிர்விளைவுகள் மோசமாக இருக்கும்!https://t.co/YsGJCQpk6s pic.twitter.com/OZRim4rulc
— சீமான் (@SeemanOfficial) July 8, 2021
குறிப்பாக “எங்களை தாண்டித்தான் சூர்யாவை நெருங்க முடியும்” என சீமான் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.