விக்னேஷ் சிவன் -நயன்தாரா தயாரிக்கும் கனெக்ட் படத்தில் இணையும் பிரபல நடிகர்.. லேட்டஸ்ட் அப்டேட்!
சென்னை: கனெக்ட் படத்தில் சத்யராஜ் நடிக்கப்போவதை உறுதிப்படுத்தும் வகையில், புது போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. ராஜா ராணி என்ற படத்திற்கு பிறகு இருவரும் இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் Rowdy Pictures தயாரித்து நயன்தாரா நடிக்கும் "கனெக்ட்" படத்தின் முதல்பார்வை சில நாட்களுக்கு முன்பு வெளிவந்து ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்த படத்தை அஸ்வின் சரவணன் இயக்குகிறார். இந்தப் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் Anupam Kher இணைந்துள்ளார். இப்படத்திற்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைக்கிறார்.
சத்யராஜ்
தற்போது இந்த படத்தில் நடிகர் சத்யராஜ் இணைந்துள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. கடைசியாக ராஜா ராணி படத்தில் நயன்தாராவின் தந்தையாக சத்யராஜ் நடித்தார். அதன் பின் தற்போது கனக்கெட் படத்தின் மூலம் சேர்ந்து நடிக்கின்றனர். ராஜா ராணி படத்தில் அப்பா மகள் கேரக்டரில் இருவரும் சிறப்பாக நடித்திருந்தனர். இன்று வரை இருவரது கேரக்டர்களும் பேசப்படுகிறது. இதேபோன்று கனெக்ட் படமும் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நயன்தாரா
சில நாட்களுக்கு முன்பு நயன்தாரா இந்தப் படத்தின் முதல்பார்வை வெளியிட்டு இருந்தார். அந்த முதல் பார்வை ரசிகர்களிடம் மிகவும் வரவேற்பைப் பெற்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து இப்போது படங்களை தயாரித்து வருகின்றனர்.
விக்னேஷ் சிவன்
இப்போது விக்னேஷ் சிவன் இயக்கி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலும் நயன்தாரா நடித்து வருகிறார். இருவரும் தற்போது ரொம்ப பிஸி என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர். இவர்களது தயாரிப்பில் கூழாங்கல் என்ற திரைப்படம் ஆஸ்கார் வரை பரிந்துரை செய்யப்பட்டு, சமீபத்தில் போட்டியில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
குவியும் வெற்றி
சமீபத்தில் இவர்கள் தயாரிப்பில் வெளியான ராக்கி படமும் நல்ல விமர்சனங்களைப் வெற்றி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் திரில்லர் படமாக அமைந்துள்ளது. பாரதிராஜாவும் அப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், Rowdy Pictures தயாரிக்கும் அடுத்த படமான கனெக்ட் படத்திற்கு அதிகம் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.