''இதற்கு காரணமானவர்களை எந்த மதக் கடவுளும் மன்னிக்காது'' - பிரபல நடிகர் உருக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த சில வருடங்களாக போருக்கான எந்த சுவடும் இல்லாமல் அமைதியாகவும் சுதந்திரமாக தங்களது அன்றாடப் பணிகளை செய்துவந்தனர் இலங்கை மக்கள். இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி இலங்கையில்  இடங்களில் கொண்டு வெடித்து அந்த அமைதியை குலைத்தது. 

Sathish Tweets About Srilnaka Bomb Blast

இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை இந்த தற்கொலைப்படைத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ள இந்த மனித வெகுண்டுத் தாக்குதலுக்கு தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பே காரணம் என்று இலங்கை அரசு சந்தேகிப்பதாக அந்நாட்டு அமைச்சர் ரஜிதா செனரத்னே கூறியுள்ளார்.

இலங்கையில் நடைபெற்றுவந்த குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு பல்வேறு திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்களும் தங்களது கண்டனங்களையும் வருத்தத்தையும் தெரிவித்துவருகின்றனர்.  

அதன் ஒரு பகுதியாக நடிகர் சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், 'இலங்கையில் இருக்கும் தமிழ் சொந்தம் ஒருவரிடம் பேசினேன். அவர் குரலில் இன்னும் பரபரப்பு அடங்கவில்லை. இதற்கு காரணமானவர்களை எந்த மதக் கடவுளும் மன்னிக்காது. PrayForSrilanka என்று போடக் கூட மனது வரவில்லை.  Pray பண்ணும் போது தானே வெடிக்க வைத்தார்கள் பாவிகள்' என்று உருக்கமாக பதிவிட்டிருந்தார்.
,

Sathish Tweets About Srilnaka Bomb Blast

People looking for online information on Bomb Blast, Sathish, Srilanka will find this news story useful.