நடிகர் ராஜசிம்ஹன் ஏழை மக்களுக்காக செய்து வரும் உதவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக நடித்து வருபவர் ராஜசிம்ஹன். இவர் சசிகுமார் நடித்த குட்டிபுலி படத்தில் வில்லனாக நடித்து அசத்தினார். மேலும் கார்த்தியின் கொம்பன், அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்திலும் இவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. நடிப்பது மட்டுமின்றி இவர் மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் ராஜசிம்ஹன் செய்து வரும் அன்னதான உதவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் ஆறு மாதங்களுக்கு மேலாக அவர் சென்னை சாலிகிராமத்தில் கஷ்டப்படும் மக்களுக்காக தினமும் உணவு வழங்கியுள்ளார். இதையடுத்து அவர், ''இன்று 193 ஆவது நாள் மதிய உணவு பகிர்ந்துண்ணும் நிகழ்வு இடம் பிரசாத் ஸ்டுடியோ அருகில் அருணாச்சலம் ரோடு சாலிகிராமம் சென்னை'' என அவர் பதிவிட்டுள்ளார். 200 நாட்களை நெருங்கும் இந்த வில்லன் நடிகரின் உதவி சமூக வலைதளங்களில் பாராட்டையும் வாழ்த்தையும் பெற்றுள்ளது.
இன்று 193 ஆவது நாள் மதிய உணவு பகிர்ந்துண்ணும் நிகழ்வு இடம் பிரசாத் ஸ்டுடியோ அருகில் அருணாச்சலம் ரோடு சாலிகிராமம் சென்னை pic.twitter.com/c3VhTlpVdN
— kuttypuli rajasimhan (@actorrajasimhan) April 20, 2020