தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டாவில் என்ன கேரக்டர் ? எப்போ ரிலீஸ் ? - பிரபல ஹீரோ உறுதி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சுந்தரபாண்டியன் படத்துக்கு பிறகு இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரனுடன் நடிகர் சசிகுமார் இணைந்திருக்கும் படம் கொம்பு வச்ச சிங்கம்டா. இந்த படத்தை இந்தேர் குமார் தயாரித்துள்ளார்.

Sasikumar speaks about Dhanush's Enai Noki Payum Thota

இந்த படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்க, சூரி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு திபு நிணன் தாமஸ் இசையமைக்க, என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படம் குறித்தும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் சசிகுமார் Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுஷிற்கு அண்ணனாக நடித்துள்ளேன். சின்ன கேரக்டர் தான். இயக்குநர் கௌதமுடன் எனக்கு நல்ல நட்பு இருக்கிறது. அவர் படத்தில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

ரொம்ப கூலா வேலை பண்ணோம். பாம்பேல 3 நாள் ஷூட் இருந்தது. அப்போது இந்த படம் செப்டம்பர் ரிலீஸ் ஆவதாக கூறப்படுவது குறித்து கேட்டபோது, கண்டிப்பா வந்துடும். நிறைய பிரச்சனைகள் இருந்தது. ஒன்றொன்றாக சரியாகிக்கொண்டு வருகிறது.

தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டாவில் என்ன கேரக்டர் ? எப்போ ரிலீஸ் ? - பிரபல ஹீரோ உறுதி வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Sasikumar speaks about Dhanush's Enai Noki Payum Thota

People looking for online information on Dhanush, Enai Noki Paayum Thota, Sasikumar will find this news story useful.