ராஜா ராணி:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி மெகா தொடர் குடும்பங்களின் ஆதரவைப் பெற்று வெற்றிகரமாக ஓடிவருகிறது. முதல் சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் இப்போது இரண்டாவது சீசன் 875 எபிசோட்களை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியலில் மக்களின் ஆதரவு பெற்ற சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆல்யா மானசாவிற்கு சமூகவலைதளங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். அவருக்கு ஜோடியாக சஞ்சீவ் நடித்துவருகிறார்.
சரவணனின் குழப்பம்:
அண்மையில் இந்த சீரியலில், சந்தியாவை திருமணம் செய்துகொள்ளும் முன்பே, அவரது பெற்றோர் இறக்கும் தருவாயில் அவர்களை கடைசியாக பார்த்தது சரவணன் தான் என்கிற உண்மை, தற்போது தான் சரவணன், சந்தியா இருவருக்குமே தெரியவந்தது. இதில் சந்தியாவின் அப்பா இறக்கும்போது சரவணனிடம் ஒரு பேனாவை கொடுக்க, அதை இப்போது யோசித்த சரவணன், சந்தியா குறித்து அவரது அப்பாவின் கனவு ஒன்று இருக்கிறது, அதை நிறைவேற்ற வேண்டும் என முடிவெடுத்தார். இதனிடையே சந்தியாவின் லட்சியம் குறித்து சந்தியா கைபட எழுதிய கடிதத்தையும் சரவணன் படித்துவிட்டார்.
சின்ன வயசு கனவு:
இந்த சீரியல் இப்போது முக்கியமானக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இதற்காக வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோ இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது. தன் கணவன் சரவணனிடம் இதுவரை யாருக்கும் தெரியாத தன்னுடைய வாழ்க்கை லட்சியம் என்ன என்பதைப் பற்றி கூறியுள்ளார். சிறுவயது முதலே சமூகத்தில் நடக்கும் குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளைப் பிடிக்கவும் தானொரு போலிஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவோடுதான் வாழ்ந்ததாக உணர்ச்சிவசப்பட்டு சொல்லி அழுகிறார்.
சரவணனின் நம்பிக்கை:
இதைக் கேட்ட சரவணன் சந்தியாவை மனம் தளரவிடாமல் எப்படியாவது சந்தியாவை போலிஸ் ஆக்குவேன் என்றும் இனிமேல் சந்தியா போலிஸ் ஆவது அவளின் கனவு மட்டும் இல்லை தன்னுடைய கனவும்தான் என்று அவளை ஊக்குவிக்கும் விதமாக உள்ளது. அடுத்தடுத்த நாட்களில் வர உள்ள எபிசோட்களை பார்க்க ஆர்வம் ஏற்படுத்தும் விதமாக இந்த ப்ரோமோ காட்சி வெளியாகியுள்ளது.