www.garudavega.com
iTechUS

“நிஜ வாழ்க்கையில் கெட்டவனே ஜெயிக்கிறான்.. இந்த படத்துல என்ன பார்த்தே பயந்தேன்” - சரவணன் EXCLUSIVE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிறுவயதில் இருந்து நடிகராக வேண்டும் என்று ஆசை கொண்டிருந்து அதற்கேற்ப நடிப்பை கற்றுக்கொண்டு நாயகனாகவும் அறிமுகமானவர் நடிகர் சரவணன். 1990 களில் திரைப்படத்தில் நடிக்க தொடங்கியிருந்த சரவணன், "பொண்டாட்டி ராஜ்ஜியம்", "தாய் மனசு" உள்ளிட்ட ஏராளமான படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார். அண்மையில் சாய் பல்லவி நடிப்பிலான கார்கி படத்தில் நடித்திருந்தார். இதேபோல் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள நான் கடவுள் இல்லை என்ற படத்தில், சரவணன் நடித்துள்ளார்.

Saravanan on SA Chandrashekar Naan Kadavul Illai

                     Images are subject to © copyright to their respective owners.

Also Read | அஞ்சலி நடிப்பில் பிரபல ஓடிடியில் வெளியான “ஜான்சி” வெப் சீரிஸ்.. விறுவிறுப்பான 2வது சீசன்..!

இதற்கிடையே சில ஆண்டுகள் எந்த படங்களிலும் தோன்றாமல் இருந்து வந்த சரவணன், கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான பருத்தி வீரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அமீர் இயக்கத்தில் உருவாகி இருந்த இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தி நாயகனாக அறிமுகமாக இருந்தார். கார்த்தியின் முதல் படமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ஒட்டுமொத்த திரை உலகையும் திரும்பி பார்க்கவும் வைத்திருந்தது. முன்னதாக பிக்பாஸிலும் சரவணன் கலந்துகொண்டார்.

Saravanan on SA Chandrashekar Naan Kadavul Illai

Images are subject to © copyright to their respective owners.

இந்த நிலையில் நடிகர் சரவணன் தற்போது Behindwoods நேயர்களுக்கு பிரத்தேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் தன்னுடைய சினிமா பயணங்கள் குறித்தும், தான் நடித்த கதாபாத்திரங்கள் குறித்தும் பேசி இருந்தார். இதில் பேசிய நடிகர் சரவணன், “இத்தனை வருடம் சினிமாவில் இருந்திருக்கேன், ஆனால் பருத்திவீரன் படத்தில்தான் நான் ஆழமாக என் நடிகனாக பதிவு செய்தேன். இதேபோல் நான் எஸ்.ஏ.சந்திரசேகர் சாரின் நான் கடவுள் இல்லை படத்துல நடிச்சிருக்கேன், நல்ல கேரக்டர் கூப்பிடுவார்னு நெனைச்சேன்.

Saravanan on SA Chandrashekar Naan Kadavul Illai

Images are subject to © copyright to their respective owners.

கெட்டவன் தான் நிஜ வாழ்க்கையில் ஜெயிக்கிறான், இதில் நான் கெட்டவனாக நடிக்க வேண்டும் என்றார். அவர் ரொம்ப நாள் அழைத்துக்கொண்டே இருந்தார். இதில் நடித்துள்ளேன், இந்த படத்தில் என் நடிப்பு பேசப்படும். இந்த படம் ராவாக வந்திருக்கிறது. இந்த படத்தில் டப்பிங் பேசும்போது என்னை பார்த்தே நான் பயந்தேன். அந்த அளவுக்கு நடிக்க வைத்துள்ளார்.” என குறிப்பிட்டுள்ளார்.

Also Read | தனது இயக்கத்தில் 19 படங்கள் நடித்த விஜயகாந்த் -ஐ நேரில் சந்தித்த SA சந்திரசேகர்.. என்ன விசேஷம்.?

“நிஜ வாழ்க்கையில் கெட்டவனே ஜெயிக்கிறான்.. இந்த படத்துல என்ன பார்த்தே பயந்தேன்” - சரவணன் EXCLUSIVE வீடியோ

மற்ற செய்திகள்

Saravanan on SA Chandrashekar Naan Kadavul Illai

People looking for online information on Bigg Boss Saravanan, Paruthiveeran chithappu, Paruthiveeran Saravanan will find this news story useful.