www.garudavega.com
iTechUS

குடும்பத்துடன் இலங்கையில் சரத் & வரலெட்சுமி.. பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் எடுத்த டூர் VIDEO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை வரலெட்சுமி சரத்குமார் & நடிகர் சரத்குமார் குடும்பத்துடன் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

SarathKumar Varalaxmi Srilanka Tour with Family

                          Images are subject to © copyright to their respective owners.

Also Read | உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்ற இலியானா.. என்ன ஆச்சு? அவரே வெளியிட்ட தகவல்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வரலெட்சுமி சரத்குமார். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்து புகழ்பெற்றவர். கடந்த 2012 ஆம் ஆண்டு வெளிவந்த 'போடா போடி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் வரலெட்சுமி சரத்குமார்.‌ 2008 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட போடா போடி திரைப்படம் 2012 ஆம் ஆண்டு வெளியானது.

தனது இரண்டாவது படமாக கன்னடத் திரைப்படமான மாணிக்யா (2014) படத்தில் நடிகர் சுதீப் உடன் நடித்தார். இந்தத் திரைப்படம் அந்த ஆண்டின் அதிக லாபம் ஈட்டிய கன்னடப் படங்களில் ஒன்றாக அமைந்தது.

SarathKumar Varalaxmi Srilanka Tour with Family

Images are subject to © copyright to their respective owners.

2014 ஆம் ஆண்டில், இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் தாரை தப்பட்டை (2016) படத்தில்  கரகாட்டம் ஆடும் நடனக் கலைஞராக நடித்தார்.

2017 இல், விக்ரம் வேதா, நிபுணன், விஸ்மயா, சத்யா, காட்டு மற்றும் மாஸ்டர் பீஸ் ஆகிய படங்களில் வரலட்சுமி அடுத்தடுத்து நடித்தார். ஜெயா டிவியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒளிபரப்பப்பட்ட உன்னை அறிந்தால் (2018) என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு  தொகுப்பாளராகவும் செயல்பட்டார்.

SarathKumar Varalaxmi Srilanka Tour with Family

Images are subject to © copyright to their respective owners.

சண்டக்கோழி 2 (2018) மற்றும் சர்கார் (2018) ஆகிய படங்களில் வில்லியாக நடித்திருந்தார் வரலெட்சுமி சரத்குமார். சமீபத்திய இரவின் நிழல் மற்றும் பொய்க்கால் குதிரை, வீர சிம்மா ரெட்டி ஆகிய படங்களில் வரலெட்சுமி நடித்திருந்தார்.

இவர் நடிப்பில் தற்போது யசோதா, பாம்பன், கலர்ஸ், ஹனுமான், சபரி ஆகிய படங்கள் வரலெட்சுமி சரத்குமார் நடிப்பில் வெவ்வேறு நிலைகளில் உருவாகி வருகிறது.

SarathKumar Varalaxmi Srilanka Tour with Family

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் வரலெட்சுமி சரத்குமார் குடும்பத்துடன் கடந்த வாரம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணத்தில் நடிகர் சரத்குமார், ராதிகா சரத்குமார், கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுன் ஆகியோர் கலந்து கொண்டனர். சுற்றுப்பயணத்தில் குடும்ப உறுப்பினர்கள் நடனம் ஆடும் வீடியோவை வரலெட்சுமி சரத்குமார் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த நடன வீடியோவை கிரிக்கெட் வீரரும், ராதிகா & சரத்குமாரின் மருமகனுமான அபிமன்யு மிதுன் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அபிமன்யு மிதுன், கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக ஒருசில போட்டிகளில் மிதுன் விளையாடி உள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு, ராதிகா & சரத்குமாரின் மகள் ராயனி ஹார்டியை திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Varalaxmi Sarathkumar (@varusarathkumar)

Also Read | ராம் & 'தமிழ்ப்படம்' சிவா இணையும் புதிய படம்.. ஷூட்டிங் எப்போ? எங்கே? #BREAKING அப்டேட்

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

SarathKumar Varalaxmi Srilanka Tour with Family

People looking for online information on Sarathkumar, Srilanka Tour, Varalaxmi Sarathkumar will find this news story useful.