ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் சர்வர் சுந்தரம். பழம்பெரும், நகைச்சுவை நடிகர் நாகேஷ், நடித்து ஹிட் அடித்த இதே படத்தின் தலைப்பில்தான் தற்போது நடிகர் சந்தானம் நடித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகில் காமெடியனாக இருந்து காமெடி படங்களில் ஹீரோவாக உருவெடுத்திருக்கும் சந்தானத்திற்கு ஜோடியாக இந்த படத்தில் வைபவி சாண்டில்யா நடித்திருக்கிறார்.
அத்துடன் சந்தானத்துடன் இணைந்து இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாகேஷின் பேரனான பிஜேஷ் நாகேஷ் நடிக்க, இவர்களுடன் கிட்டி, மயில்சாமி, சண்முகராஜன், சுவாமிநாதன், ராதா ரவி, செஃப் தாமோதரன், வெங்கடேஷ் பட், உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்த 2017-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இந்த பட வெளியீட்டுக்காக பலரும் காத்திருந்த நிலையில் இப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகுமா? ஓடிடி தளத்தில் வெளியாகுமா? என பலருக்கும் கேள்விகள் இருந்து வந்துள்ளன.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் இதே கேள்வியை கேட்க, அதற்கு சந்தானமோ, “மிக விரைவில் சர்வர் சுந்தரம் படத்தை ஓடிடியில் பார்க்க நேரலாம்” என பதில் அளித்துள்ளார்.
இதனிடையே சந்தானம் நடித்துள்ள டிக்கிலோனா Zee5 ஓடிடியில் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி நேரடியாக வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் சந்தானத்துடன் யோகிபாபு, ஆனந்த ராஜ், முனீஷ் காந்த், மாறன், மனோகர் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தை கார்த்திக் யோகி இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.