நடிகை ஆல்யா மானஸா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையுடன் இருக்கும் ஃபோட்டோவை வெளியிட்ட அவர், தனது குழந்தைக்கு அய்லா செய்யத் (Aila Syed) என்று பெயரிட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். அவரது பதிவு மிகவும் வைரலானது.
இந்நிலையில் சஞ்சீவ் கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவி ஆல்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து , ஆய்லாவிற்கு வாழ்த்துகளும் ஆசிர்வாதங்களும் வழங்கியவர்களுக்கு நன்றி. ஆய்லாவை உங்களிடம் காட்டுவதற்கு அதிக ஆவலாக காத்திருக்கிறோம். கொரோனா பிரச்சனைகள் முடிந்த பிறகு உங்களுக்கு காட்டுகிறோம்'' என்றார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடர் மூலம் சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆல்யா மானஸா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்கள். அதனைத் தொடர்ந்து இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டனர். தற்போது சஞ்சீவ் கார்த்திக் விஜய் டிவியில் காற்றின் மொழி சீரியலில் நடித்து கொண்டிருக்கிறார்.