www.garudavega.com

ராஜூவை கட்டிப்பிடித்து கண்ணீர்விட்ட சஞ்சீவ்!!.. பிக்பாஸ் வீட்டில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் ஜோடிகளாக பிரிந்து நாமினேஷன் ப்ரோசஸில் இருந்து தப்பிப்பதற்கான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டனர்.

sanjeev cries for raju heartfelt game in biggbosstamil5

அதன்படி, தனித்தனி பூத் போன்ற அறைக்குள் அமர வேண்டும். அவர்களிடம் பிக்பாஸ் தனித்தனியே பேசுவார். அப்போது இரண்டு ஜோடி நபர்களும் தங்களுடைய போட்டோவையோ அல்லது தம்முடைய இணை ஜோடியினரின் ஃபோட்டோவையோ பிக்பாஸ் கேட்கும்போது காட்ட வேண்டும்.

அவ்வாறு 2 போட்டியாளர்களும் ஒரே ஃபோட்டோவை காண்பித்தால், அந்த நபர் நாமினேஷனில் இருந்து தப்பிப்பார். ஒருவேளை 2 போட்டியாளர்களும் வேறு வேறு ஃபோட்டோக்களை காண்பித்தால், அவர்கள் இருவருமே நாமினேஷனில் தான் இருப்பார்கள்.

அந்த வகையில் பிரியங்கா - அபினய் ஜோடி தத்தம் புகைப்படங்களை காண்பித்தனர். அமீர் - பாவனி ஜோடியில் இருவருமே அமீர் புகைப்படத்தை காண்பித்தனர். வருண் - அக்‌ஷரா ஜோடியில் இருவருமே ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி புகைப்படங்களை காண்பித்தனர். இதேபோல், ராஜூ - சஞ்சீவ் ஜோடியில் இருவருமே சஞ்சீவ் ஃபோட்டோவை காண்பித்தனர்.

அதாவது, வரும் நாமினேஷனில் இருந்து சஞ்சீவ் மற்றும் அமீர் காப்பாற்றப்பட்டனர். மற்றவர்கள் இந்த வார நாமினேஷனில் தொடர்கின்றனர். இதில்  ஹைலைட்டே அமீர் மற்றும் பாவனி மற்றும் ராஜூ மற்றும் சஞ்சீவின் புரிதல் தான். இதேபோல் அக்‌ஷராவின் மீதும் வருணும், வருண் மீது அக்‌ஷராவும் கொண்ட அன்பின் அக்கறை காரணமாக அக்‌ஷரா வருணையும், வருண் அக்‌ஷராவையும் காண்பித்தனர்.

இதை குறிப்பிட்டு அழுதபடி சஞ்சீவ் ராஜூ குறித்து பிக்பாஸ் போட்டியாளர்களிடையே நெகிழ்ச்சி அடைந்தார். அதன்படி, “என் குழந்தைகள் இந்த வீட்டுக்குள் வரும்வரை நான் இந்த வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதை காரணமாக நான் இந்த வீட்டில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதே காரணத்தை ராஜூவும் சொல்லிவிட்டார்” என்று சஞ்சீவ் கூறினார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Sanjeev cries for raju heartfelt game in biggbosstamil5

People looking for online information on Biggboss tamil5, BiggBoss5, BiggBossTamil5, Raju sanjeev, Sanjeev, Sanjeev raju, Star vijay, Vijay tv will find this news story useful.