சாட்டர்டே நைட் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் போது தகாத முறையில் நடந்த நபரை, அப்படத்தின் இளம் நடிகை அறைந்த வீடியோ பரவி வருகிறது.
ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் நிவின் பாலி, அஜு வர்கீஸ், சைஜு குருப் மற்றும் சிஜு வில்சன் ஆகியோர் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சானியா ஐயப்பன், கிரேஸ் ஆண்டனி, மாளவிகா ஸ்ரீநாத் ஆகியோரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். இந்த படம் செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில் கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் ஹைலைட் மாலில் நடந்த சாட்டர்டே நைட் பட ப்ரொமோஷன் நிகழ்ச்சியில், நடிகர் நிவின் பாலியுடன், மலையாள நடிகைகள் சானியா ஐயப்பன், கிரேஸ் ஆண்டனி ஆகியோர் கலந்து இருந்தார்கள். அப்போது கூட்ட நெரிசலில் சிலர் நடிகைகளிடம் மோசமாக நடந்து கொண்டுள்ளனர். அதாவது, பட புரமோஷன் நிகழ்ச்சி முடிந்து மேடையில் இருந்து நடிகைகள் சானியா ஐயப்பன், கிரேஸ் ஆண்டனி இருவருமே கீழே இறங்கி சென்றபோது நடிகைகளுடன் செல்பி எடுப்பதற்காக சிலர் அவர்களை நெருங்கினர், அந்த சமயத்தில் இருவரிடம் சிலர் தகாத காரியத்தை பலவந்தமாக செய்துள்ளனர். இது குறித்த நடிகை கிரேஸ் ஆண்டனி தமது கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.
இதேபோல் தங்களிடம் அதே இடத்தில் தவறாக நடந்துகொண்ட ஒரு நபரை இளம் நடிகை சானியா ஐயப்பன் ஓங்கி பளாரென அறைந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பதிவிட்டுள்ள சானியா ஐயப்பன். “நானும் எனது படக்குழுவினரும் எங்களின் புதிய திரைப்படமான "Saturday Night" திரைப்படத்தை கோழிக்கூட்டில் உள்ள ஒரு மாலில் விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தோம்.
🙄#saturdaynight #SaniyaIyappan #NivinPauly pic.twitter.com/yjMVnX0Dog
— Joseph Alex (@josephalex_yt) September 27, 2022
விளம்பர நிகழ்வுகள் கோழிக்கோட்டின் அனைத்து இடங்களிலும் சிறப்பாக நடந்தன மற்றும் கோழிக்கோடு மக்களின் அன்பிற்கு நன்றி. வணிக வளாகத்தில் நடந்த நிகழ்வில் கூட்டத்தை கையாளவும் பராமரிக்கவும் பாதுகாப்பு கடினமாக இருந்தது. நிகழ்விற்குப் பிறகு, நானும் எனது சக நடிகையும் கிளம்பிக் கொண்டிருந்தோம், சிலர் என் சக நடிகையிடம் தவறாக நடந்துகொண்டார்கள், அவசரம் மற்றும் கூட்டத்தின் காரணமாக அவருக்கு அதை பார்க்கவோ அல்லது எதிர்வினையாற்றவோ கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன்பிறகு, நானும் இதேபோன்ற பலவந்தத்தை எதிர்கொண்டேன், அந்த வீடியோவை நீங்கள் அனைவரும் பார்த்ததால் நான் இதை விளக்குகிறேன்.
ஆகவே, இதுபோன்ற தேவையற்ற அதிர்ச்சிகரத்தை யாரும் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கக்கூடாது என்று நான் விரும்புகிறேன், ஏனென்றால் பெண்களுக்கு எதிரான வன்முறை நடந்தால், இந்த நபர்களுக்கு எதிராக விளைவுகளும் நடவடிக்கைகளும் இருக்கும்.” என்று தமது இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளார்.