பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடன அமைப்பாளர் சாண்டி. அந்நிகழ்ச்சியில் தனது நகைச்சுவையால் மக்களின் மனதை கட்டிப்போட்டார். மேலும் சினிமா பாடல்களை ரீமிக்ஸ் செய்து அங்கு நடந்த செயல்களை வைத்து அவர் பாடுவதற்கு பல ரசிகர்கள் இருந்தனர். அதே போல் அந்நிகழ்ச்சியின் மூலம் அவரை விடவும் அவரது மகள் லாலா மிகவும் பிரபலமானார்.
வீட்டில் இருக்கும் அவர் தற்போது ஒரு கொரோனா பாடலை இயற்றியுள்ளார். இதன் மூலம் சாண்டி 'பாடகர்' என்ற புதிய பரிமாணத்தை அடைந்துள்ளார். கொரோனா நேரத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முறைகள் பற்றியும், கொரோனாவை நாம் எல்லோரும் எப்படி மேற்கொள்ள போகிறோம் என்பது பற்றியும் இந்தப் பாடல் கூறுகிறது. மேலும் விசேஷமாக அதில் குழந்தையை லாலாவின் நடன அசைவுகள் அனைவரையும் கவர்ந்துள்ளது. எளிய தமிழில் இளைஞர்களுக்கு புரியும் வண்ணம் அந்த பாடல் அமைந்திருப்பதால் இந்த பாடலை இளைஞர்கள் வைரலாகி வருகின்றனர்.