www.garudavega.com

அட, துணிவு படத்துல சமுத்திரக்கனி இந்த கேரக்டர்ல தான் நடிக்கிறாரா?.. வைரலாகும் BTS புகைப்படம்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் மற்றும் இயக்குனர் சமுத்திரக்கனி பகிர்ந்துள்ள துணிவு படத்தின் BTS புகைப்படம், தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது.

Samuthirakani share thnivu bts stills h vinoth and nirav shah

நடிகர் அஜித் குமார் நடிப்பில் இதற்கு முன்பாக வலிமை திரைப்படம், கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதியன்று வெளியாகி இருந்தது. H. வினோத் இயக்கி இருந்த இந்த திரைபடத்தை போனி கபூர் தயாரித்திருந்தார்.

வலிமை திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக துணிவு திரைப்படத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கிறார். நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படத்திற்கு பிறகு மூன்றாவது முறையாக துணிவு திரைப்படம் மூலம் நடிகர் அஜித் குமார், இயக்குனர் H. வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் இணைகின்றனர்.

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதே போல நடிகர் மற்றும் இயக்குனர் சமுத்திரக்கனியும், சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த படத்திலும் நடித்து வருகிறார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.

Samuthirakani share thnivu bts stills h vinoth and nirav shah

இந்த படத்தின் ஒளிப்பதிவை நீரவ் ஷா கவனிக்கிறார். கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

துணிவு படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. துணிவு படத்தின் ரிலீஸிற்கு இன்னும் ஒன்றரை மாதங்கள் உள்ள நிலையில், படத்தின் அப்டேட்டையும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Samuthirakani share thnivu bts stills h vinoth and nirav shah

இந்த நிலையில், துணிவு படத்தில் நடித்து வரும் சமுத்திரக்கனி தற்போது பகிர்ந்துள்ள BTS புகைப்படம் ஒன்று அதிகம் வைரலாகி வருகிறது.

Samuthirakani share thnivu bts stills h vinoth and nirav shah

இது தொடர்பான புகைப்படங்களில் போலீஸ் கெட்அப்பில் இருக்கும் நடிகர் சமுத்திரக்கனி, இயக்குனர் H. வினோத் மற்றும் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா ஆகியோருடம் உள்ளார். "துணிவு……. பரபரப்பாக…." என தனது கேப்ஷனில் குறிப்பிட்டுள்ள சமுத்திரக்கனி, துணிவு படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் இதன் மூலம் தெரிகிறது.

Samuthirakani share thnivu bts stills h vinoth and nirav shah

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Samuthirakani share thnivu bts stills h vinoth and nirav shah

People looking for online information on Ajith Kumar, Boney kapoor, H Vinoth, Nirav shah, P Samuthirakani, Thunivu will find this news story useful.