சென்னை, 13, பிப்ரவரி 2022: கே.கே.ஆர் சினிமாஸ் தயாரிக்க, ரா.பரமன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, காளி வெங்கட், ரித்திகா (பிக்பாஸ் வின்னர்) ஆகியோர் நடிக்கும் திரைப்படம் ‘பப்ளிக்’. விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் போஸ்டர்கள், sneak peak கவனத்தை ஈர்த்து வருவதுடன் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் 3வ்து ஸ்னீக்பீக் வெளியாகியுள்ளது.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
முன்னதாக சிங்காரவேலர், ரெட்டைமலை சீனிவாசன்,அயோத்திதாச பண்டிதர், நடேசனார், கக்கன், சத்தியமூர்த்தி, பாரதிதாசன், இளையபெருமாள், பட்டுகோட்டைஅழகிரி, ஜீவா, நெடுஞ்செழியன், மூக்கையாதேவர், ராமமூர்த்தி, அன்னிபெசன்ட் அம்மையார், காயிதேமில்லத் ஆகியோரின் படங்களை கொண்டு வெளியிடப்பட்டுள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரசியல் விழிப்புணர்வு
இதில் பெரியார் படம் புறக்கணிக்கப்பட்டது குறித்து பெரும் விவாதம் எழுந்தது. சமுக ஊடகத்தில் இது குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். இது குறித்து படத்தின் இயக்குனர் ஆர். பரமன் கொடுத்த பேட்டி பலரின் பாராட்டையும் பெற்றது. அதற்கு அடுத்து வெளி வந்த sneak peak 1-இல் ‘மாடே மாடே’ என்று மாட்டை வைத்து பெட்ரோல் டீசல் விலை உயர்வை விமர்சனம் செய்யும் காட்சி புதுமையானதாகவும், நையாண்டி தனமாகவும், அதே நேரத்தில் அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் இருந்தது.
sneak peak 2
அடுத்தாக வெளி வந்த sneak peak 2-ல் போஸ்டரில் பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரைப்போல வேட மிட்டவர்கள், ஒரு டீ கடை அருகில் அமர்ந்திருப்பதைப் போன்ற போஸ்டரும் கவனத்தை ஈர்த்தது. sneak peak-2 வீடியோவில் அரசியல் தலைவர் ஒருவர், தமிழே அறியாத ஒரு பெண்ணுக்கு தனது கட்சிப் பெயரை சொல்லித்தருவது போலவும், ‘கட்சி பெயரே சொல்ல வரலை.. எப்படி சீட் வாங்கித் தருவது’ என்று கேட்பது போலவும் ஒரு sneak peak வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அடுத்த தர்மயுத்தமா
அதை தொடந்து தற்போது வெளியாகியுள்ள sneak peak-3 போஸ்டரில் எம்.ஜி.ஆர் படம், அதிமுக கொடி போன்று வரையபட்ட சுவத்துக்கு கீழே ரித்திகா சோகமாக உட்கார்ந்து இருப்பது போன்று போஸ்டர் வெளியிடப் பட்டுள்ளது. எம்.ஜி.ஆர், அதிமுக கொடி என்று இந்த போஸ்டரில் உள்ள குறியீடுகளை பார்க்கும் போது அடுத்த தர்மயுத்தமா என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
திருக்குறள் எழுதுனது திருவள்ளுவரா
Sneak peak-3 வீடியோவில் திருக்குறள் எழுதுனது திருவள்ளுவரா என்று இலக்கிய அணி பொறுப்புக்கு வரும் ஒருவர் கேட்கும் வீடியோ வெளியாகி உள்ளது. இது அரசியல் இன்றைய அரசியல் நிலையை காட்டுவது போல் அமைந்து உள்ளது. பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படி வித்தியாசமான போஸ்டர்கள், sneak peak மூலம் கவனம் பெற்று வரும் பப்ளிக் படம். என்ன சொல்ல வருகிறது. எந்த அரசியலை பேச போகிறது என்கிற எதிர்பார்ப்பை எகிற செய்து உள்ளது.
Also Read: இளையராஜா இசையில் பிரஜன் நடிக்கும் புதிய படம்.. யுவன் வெளியிட்ட First Look! ஹீரோயின் யாரு?