ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை சமீரா ரெட்டி கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்த வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளிவந்த அசல், நடுநிசி நாய்கள், வேட்டை, வெடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் அக்ஷய் வர்தே என்பவரை 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகான இரு பிள்ளைகள் உள்ளன.
சென்ற வருடம் இவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாய்மையை போற்றும் விதத்தில் கர்ப்பமாக இருக்கும் போது அதிகமான புகைப்படங்களை சமூக வளைதளத்தில் பதிவேற்றினார். தற்போது அதனை தொடர்ந்து தனது இரு குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் அழகான புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.