www.garudavega.com

"எவ்வளவு மோசமான விஷயங்கள் இருந்தாலும்".. சமந்தா நெகிழ்ச்சியான பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'யசோதா' படத்திற்காக நடிகை சமந்தா  போட்டோஷூட் நடத்தி நெகிழ்ச்சியான பதிவுடன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Samantha Yashoda Movie Promotion Photoshoot Viral Photos

Also Read | Kamal Haasan : பிறந்தநாள் நிகழ்வில் கமலுடன் நடனம் ஆடிய நடிகை பிந்து மாதவி.. Trending

சமந்தா (Samantha) தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம் படங்களின் தெலுங்கு உருவாக்கத்தில் நடித்து புகழ்பெற்றார். 

சமீபத்தில் ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2 இவருக்கு நல்ல பேரை பெற்றுத்தந்தது. கடைசியாக தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து இருந்தார்.

சமந்தா, தற்போது தமிழில் இயக்குனர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் புதிய படம்,  தெலுங்கில் ‘ஷகுந்தலம்’ 'யசோதா', "குஷி' படங்களில் நடித்துள்ளார். நடிகை டாப்ஸியின் அவுட்சைடர்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகிறார் நடிகை சமந்தா.

தற்போது வாடகைத் தாயாக நடிகை சமந்தா நடித்துள்ள யசோதா படம், தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வரும் நவம்பர் மாதம் 11 ஆம் தேதி வெளியாக உள்ளது. 

இந்தப் படத்தில், பிரபல நடிகர்களான வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ், பிரியங்கா சர்மா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

'யசோதா’ திரைப்படத்தினை Sridevi Movies  சார்பில்  சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரித்துள்ளனர். ஹரி-ஹரீஷ்  இப்படத்தில் இயக்குனர்களாக அறிமுகமாகிறார்கள்.

இந்த படத்தின் ரிலீஸை முன்னிட்டு நடிகை சமந்தா பல்வேறு ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். இதற்கான பிரத்யேக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தன்னுடைய பதிவில், "எனது நல்ல நண்பர் இயக்குனர் ராஜ் (ஃபேமிலி மேன் புகழ்) சொல்வது போல், ஒரு நாள் எப்படி இருந்தாலும், எவ்வளவு மோசமான விஷயங்கள் இருந்தாலும், ராஜின் குறிக்கோள்

"Shower, Shave, Show Up!!" என்பது தான்.

இதை யசோதா திரைப்பட ப்ரோமோஷனுக்காக ஒரு நாள் ராஜிடம் இருந்து கடன் வாங்கி உள்ளேன். ♥️ 11ஆம் தேதி திரையரங்குகளில் சந்திப்போம்'" என சமந்தா பதிவிட்டுள்ளார்.

 

Also Read | விஜய்க்கு கதை சொன்னது உண்மையா.? Love Today இயக்குநர் பிரதீப் சொன்ன‌ பதில்.!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Samantha Yashoda Movie Promotion Photoshoot Viral Photos

People looking for online information on Samantha, Samantha ruth prabhu, Yashoda Movie will find this news story useful.