ஐதராபாத்:விவாகரத்துக்கு பின் சமந்தா நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது.
சமந்தா - The Rise
சமந்தா (Samantha) தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் இயக்கிய மாஸ்கோவின் காவேரி படம் மூலம் தமிழ் சினிமாவில அறிமுகமானார். விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம் படங்களின் தெலுங்கு உருவாக்கத்தில் நடித்து புகழ்பெற்றார். சமீபத்தில் ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2 இவருக்கு நல்ல பேரை பெற்றுத்தந்தது. சென்னை பல்லாவரத்தை சார்ந்த இவர், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகும் கூட தொடர்ச்சியாக நடித்து வந்த சமந்தா சமீபத்தில் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார்.
சமந்தாவின் அடுத்த படங்கள்
விவாகரத்துக்கு பின் தற்போது தமிழில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, இயக்குனர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் புதிய படம், தெலுங்கில் ‘ஷகுந்தலம்’ 'யசோதா' படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான புஷ்பா தி ரைஸ் படத்தின் ஒ அண்ட்டா வா மாவா பாடலுக்கு நடனமாடி வைரலானார். இந்த பாடல் தென்னிந்தியா முழுவதும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்துள்ளது.
யசோதா
புகழ்பெற்ற ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிப்பில், நடிகை சமந்தா, ‘யசோதா’ படத்தில் எழுத்தாளாராக முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். திறமை மிகு இளம் இணைகளான ஹரி - ஹரிஷ் கூட்டணி இப்படம் மூலம் இயக்குநர்களாக அறிமுகமாகிறார்கள். இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
வலிமை பட விநியோகஸ்தர்கள் சொல்லி வைத்தார் போல் ஒரே மாதிரி சம்பவம்.. குஷியில் அஜித் ரசிகர்கள்!
இப்படத்தை கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். முதல் கட்டப்படப்பிடிப்பு டிசம்பர் 6ம் தேதி துவங்கி, 24ம் தேதி வரை நடைபெற்றது. சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா ஷர்மா ஆகியோர் இந்த முதல்கட்ட படப்பிடிப்பில், முக்கியக் காட்சிகளில் நடித்துள்ளனர். இப்படத்தில் ராவ் ரமேஷ், முரளி சர்மா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஜனவரி 3 முதல் 12 வரையிலும், இறுதிகட்ட படப்பிடிப்பு ஜனவரி 20 முதல் மார்ச் 31 வரையிலும் நடைபெறவுள்ளது. இதனை படக்குழு புதிய போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.
தயாரிப்பாளர்: சிவலெங்கா கிருஷ்ண பிரசாத்
இயக்குனர்கள்: ஹரி மற்றும் ஹரிஷ்
இசை: மணி சர்மா
ஒளிப்பதிவு: M சுகுமார்
எடிட்டர்: மார்த்தாண்ட் K வெங்கடேஷ்
கலை: அசோக்
சண்டைகள்: வெங்கட்
வசனங்கள்: புலகம் சின்னராயனா, Dr. சல்லா பாக்ய லட்சுமி
பாடல் வரிகள்: ராமஜோகையா சாஸ்திரி
லைன் புரொடியூசர்: வித்யா சிவலெங்கா
கிரியேட்டிவ் டைரக்டர்: ஹேமம்பர் ஜாஸ்தி
மாநாடு படத்தின் அனைத்து மொழி ரீமேக் உரிமையை கைப்பற்றிய சிவகார்த்திகேயன் பட தயாரிப்பாளர்!