RRR Others USA
www.garudavega.com

3 YEARS OF மஜிலி… நாக சைதன்யாவோடு இருக்கும் போஸ்டரைப் பகிர்ந்த சமந்தா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சமந்தா தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவோடு நடித்த மஜிலி திரைப்படம் 3 ஆண்டுகளைக் கடந்துள்ளது.

Samantha shared naga chaitanya majili movie poster

“10 வருஷமா ஏன் பேட்டி கொடுக்குறது இல்ல”…. நெல்சன் கேள்விக்கு விஜய்யின் பதில்? – வைரல் promo!

தமிழ் தெலுங்கு அறிமுகம்…

சமந்தா தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் கவனம் பெற்ற அவர் அதே படத்தின் தெலுங்கு பதிப்பில் கதாநாயகியாக நாக சைதன்யாவுடன் நடித்தார். அந்த படத்தின் வெற்றி அவரை தெலுங்கில் முன்னணி நடிகையாக்கியது. அதன் பின்னர் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் மாறி மாறி நடித்து வருகிறார்.

திருப்புமுனையான ஈகா…

ராஜமௌலி இயக்கத்தில் நானியோடு அவர் நடித்த நான் ஈ திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்து முன்னணி நடிகையாக்கியது. அதன் பிறகு முன்னணி நடிகர்களோடு அவர்   கத்தி, மெர்சல் ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2  வெப் தொடர் ஆகியவை அவரை மேலும் முன்னணி நடிகையாக்கின.

Samantha shared naga chaitanya majili movie poster

திருமனமும் விவாகரத்தும்…

சென்னை பல்லாவரத்தை சார்ந்த இவர், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகும் கூட தொடர்ச்சியாக நடித்து வந்த சமந்தா சமீபத்தில் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். விவாகரத்துக்குப் பின் தற்போது தமிழில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, இயக்குனர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் புதிய படம்,  தெலுங்கில் ‘ஷகுந்தலம்’ 'யசோதா' படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான புஷ்பா தி ரைஸ் படத்தின் ஒ அண்ட்டா வா மாவா பாடலுக்கு நடனமாடி வைரலானார். இந்த பாடல் தென்னிந்தியா முழுவதும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்துள்ளது.

Samantha shared naga chaitanya majili movie poster

மஜிலி

இந்நிலையில் இப்போது நாக சைதன்யாவோடு கடைசியாக சமந்தா மஜிலி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி வெளியானது. இதையடுத்து தற்போது இந்த படம் வெளியாகி 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அந்த படத்தின் போஸ்டரை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மஜிலி படத்தின் போஸ்டரைப் பகிர்ந்துள்ளார். விவாகரத்து முடிவுக்குப் பிறகு முதல் முறையாக நாக சைதன்யா சம்மந்தப்பட்ட புகைப்படத்தை சமந்தா பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

”என்ன ஆச்சுனு தெரில”… ஐஸ்வர்யா ராஜேஷ் Tweet… மீட்டுக்கொடுத்த இன்ஸ்டாகிராம்!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Samantha shared naga chaitanya majili movie poster

People looking for online information on Majili movie, Majili movie poster, Naga chaitanya, Samantha, Samantha ruth prabhu, Shiva Nirvana will find this news story useful.